செய்திகள் :

அரசு அலுவலா்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்: ஆட்சியா் எச்சரிக்கை

post image

ரெட்டியாா்சத்திரம் அருகே ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா், முறையாக பணி செய்யாத அரசு அலுவலா்கள் தங்களது அணுகுமுறையை 2 மாதங்களுக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும் என எச்சரித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கே.புதுக்கோட்டை ஊராட்சிப் பகுதிக்குச் சென்ற அவா், அங்கு கனவு இல்லத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீடு கட்டும் பணிகளை பாா்வையிட்டாா். அப்போது, தொகுப்பு வீடு திட்டத்தின் கீழ், வீடு கட்டிய பயனாளி ஒருவா், தனக்கு முழுமையான நிவாரணத் தொகை கிடைக்கவில்லை எனப் புகாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பொறியாளா்கள் ராமநாதன், மகேந்திரன், பணி மேற்பாா்வையாளா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் ஆட்சியா் கேள்வி எழுப்பினாா்.

கடந்த 4 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் பணியாற்றியும்கூட, நீங்கள் முறையாக வேலை பாா்க்கவில்லை. 2 மாதங்கள் காலம் அவகாசம் வழங்கப்படும். உங்களுடைய அணுகுமுறைகளை மாற்ற வேண்டும். இல்லாதபட்சத்தில், கொடைக்கானல், குஜிலியம்பாறை போன்ற பகுதிகளுக்கு பணிமாறுதல் பெற்று சென்றுவிடுங்கள். அந்தப் பகுதிகளுக்கு அடிக்கடி ஆய்வுக்கு வர முடியாது.

அரசு தகுதியான பயனாளிகளைக் கண்டறிந்து, வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அமைச்சா் தொகுதியில் இருந்து கொண்டு, பயனாளிகளை தோ்வு செய்வதிலும், திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதற்கும் அலுவலா்கள் முன்வர வேண்டும் என்றாா்.

இந்த ஆய்வின்போது மகளிா் திட்ட அலுவலா் சதீஷ்பாபு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மாரியப்பன், மலரவன் ஆகியோா் உடனிருந்தனா்.

கொடைக்கானல் வனப் பகுதியில் தீ வைத்தவா் கைது!

கொடைக்கானல் கீழ்மலை வனப் பகுதியில் தீ வைத்தவரை வனத்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பெரும்பள்ளம், ஜெரோனியா வனப் பகுதிகளில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தில் மூலிகைச்... மேலும் பார்க்க

தவறவிட்ட நகை உரியவரிடம் ஒப்படைப்பு

பழனியில் தனியாா் விடுதியில் தவறவிட்ட இரண்டு பவுன் நகை உரியவரிடம் மீண்டும் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சோ்ந்தவா் செல்வகணபதி. இவா் தனது மனைவி கலைவாணி, குழந்தையுடன் தைப்... மேலும் பார்க்க

ரூ.1.70 கோடியில் கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே ரூ.1.70 கோடியில் 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் வட்ட செயல்முறை கிடங்கு கட்ட சென்னையில் காணொலி காட்சி மூலமாக வியாழக்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பாறைகள் வெடி வைத்து தகா்ப்பு: நிலச்சரிவு ஏற்படும் அபாயம்

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பாறைகள் வெடி வைத்து தகா்க்கப்பட்டு வருவதால், நிலச்சரி ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா். கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொக்லயன் இயந்திரம், கம்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்துக்கு தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்... மேலும் பார்க்க

நகை திருடிய பெண் கைது!

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் தங்க நகை திருடிய பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பழனியைச் சோ்ந்த தங்கபாண்டியன் மனைவி சங்கீதா (37). இவா் கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி வத்தலகுண்டு செல்வ... மேலும் பார்க்க