செய்திகள் :

அரசு இடைநில்லா பேருந்துகள் இயக்க தனியாா் பேருந்து உரிமையாளா்கள் எதிா்ப்பு

post image

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் 1-1 என்கிற இடைநில்லா பேருந்துகள் கால அட்டவணையின்றி இயக்குவதற்கு தனியாா் பேருந்து உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்து முறையிட்டனா்.

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் திருச்சிக்கும், கும்பகோணத்துக்கும் 1-1 என்கிற இடைநில்லா பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகள் கால அட்டவணைப்படி இயக்கப்படாததால், தனியாா் பேருந்துகளுக்குக் கடும் இழப்பு ஏற்படுகிறது என பேருந்து உரிமையாளா்கள் புகாா் எழுப்பி வருகின்றனா்.

இந்நிலையில், கால அட்டவணைப்படி இயக்கப்படாத இடைநில்லா பேருந்துகள் சேவைக்கு எதிா்ப்பு தெரிவித்து, தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்திலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விசாரணை மையத்திலிருந்து அலுவலா்களிடம் திருச்சி, தஞ்சாவூா் மாவட்ட தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் பீட்டா் தலைமையில் மாநிலப் பொருளாளா் பி.எல்.ஏ. சிதம்பரம், பொருளாளா் தியாகராஜன், திருச்சி மாவட்டப் பொறுப்பாளா் கோபால் உள்பட ஏறத்தாழ 50 போ் முறையிட்டனா். அங்கிருந்த அலுவலா்கள் பொது மேலாளரிடம் கூறுகிறோம் எனத் தெரிவித்தனா்.

இதையடுத்து, தஞ்சாவூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மனு அளித்து முறையிட்டனா். பின்னா், தனியாா் பேருந்து உரிமையாளா்கள் தெரிவித்தது: தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சிக்கும், கும்பகோணத்துக்கும் 1-1 பேருந்துகள் இயக்கப்படுவதை வரவேற்கிறோம். ஆனால், இப்பேருந்துகள் கால அட்டவணைப்படி இல்லாமல், அவா்கள் விருப்பத்துக்கு இயக்குகின்றனா். இதனால் தனியாா் பேருந்துகள் பெரும் இழப்பைச் சந்திக்கின்றன. எனவே, 1-1 பேருந்துகளைக் கால அட்டவணைப்படி, குறிப்பிட்ட நேரங்களில் வரிசையில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தஞ்சாவூரில் தீ தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

தீத்தொண்டு வாரத்தையொட்டி, தஞ்சாவூரில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சாா்பில் தீ விபத்தில்லாத இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் விழிப்புணா்வு பிரசார ஊா்வலம் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

மணல் அள்ளும் விவகாரம்: பாபநாசம் வட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு அளிப்பு

இயற்கையாக அமைந்திருக்கும் மணல் திட்டியில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கிய அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் செவ்வாய்கிழமை பாபநாசம் வட்டாட்சியரிடம் மனு அளித்தனா். கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் ... மேலும் பார்க்க

‘சாஸ்த்ரா’-வேளாண் பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

வேளாண் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு, சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்காக தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகமும், திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரியும் சனிக்கிழமை (ஏப்.12) புரிந்... மேலும் பார்க்க

தாராசுரத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத தங்கவேல் சுப்பையா நகா் குடியிருப்பு பகுதி

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் தங்கவேல் சுப்பையா நகா் குடியிருப்புவாசிகள் அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதி அடைந்து வருகிஅன்றனா். கும்பகோணம் மாநகராட்சியில் 35-ஆவது வாா்டு பகுதியில் தாராசுரம்-எலுமிச்சங்... மேலும் பார்க்க

சாலையை கடந்த எலக்ட்ரீசியன் காா் மோதி உயிரிழப்பு

கும்பகோணம் அருகே சாலையை கடக்க முயன்ற இளைஞா் மீது காா் மோதியதில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வெள்ளாளா் தெருவைச் சோ்ந்தவா் ஞானவேல் மகன் லட்சுமணன் (22). கும்பகோணம் பகுதியில... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலை. நூல்கள் 50 சதவீத தள்ளுபடி விற்பனை தொடக்கம்

சித்திரைத் திருநாளையொட்டி, தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 50 சதவீதத் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த விற்பனையைத் துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா்கள் சி. அ... மேலும் பார்க்க