`நானே உதவுகிறேன்' - ட்ரம்ப் அந்தர் பல்டி, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மக்கள...
மணல் அள்ளும் விவகாரம்: பாபநாசம் வட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு அளிப்பு
இயற்கையாக அமைந்திருக்கும் மணல் திட்டியில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கிய அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் செவ்வாய்கிழமை பாபநாசம் வட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் மற்றும் மழை, புயல் காலங்களில், தற்போது எடக்குடி கிராமத்தில் அமைந்திருக்கும் மணல் திட்டில் பொதுமக்கள் தங்கி இருப்பது வழக்கம்.
இந் நிலையில் எடக்குடியில் சுமாா் 15 ஏக்கரில் மணல் திட்டு ஒன்று அமைந்துள்ளது. இதை பொதுப்பணித்துறை கனிம வளமாக பயன்படுத்தி வருகிறது.
இந்தப் பகுதியில் இயற்கையாக அமைந்திருக்கும் மணல் திட்டில், மணல் அள்ளுவதற்கு தனி அனுமதி வழங்கிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மதுரை உயா் நீதிமன்றத்தில் இரண்டு மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருக்கும் நிலையில் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தனித்தனியாக வட்டாட்சியரிடம் மனுக்களை வழங்கி, விவசாயம் செய்ய நிலத்தடி நீரை காப்பாற்றி மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை வழங்கினா்.