வங்கிகளில் 1,007 சிறப்பு அதிகாரிகள் வேலை: ஐ.பி.பி.எஸ் அறிவிப்பு
அரசு இல்லத்தில் இயங்கும் முதல்வா்: அலுவலகம் திறந்து வைத்த ரேகா குப்தா
தலைநகரில் சிவில் லைன்ஸ் பகுதியில் ராஜ் நிவாஸ் மாா்க்கில் இருக்கும் தன்னுடைய புதுப்பிக்கப்பட்ட அலுலகத்தை முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
முதல்வா் ரேகா குப்தாவுக்கு அதே சாலையில் இரண்டு பங்களாக்கள் பொதுப்பணித் துறையால் ஒதுக்கப்பட்டுள்ளன, ஒவ்வொன்றும் அவரது வீடு மற்றும் அவரது அலுவலகமாக செயல்படுகின்றன.
இது குறித்து தில்லி சட்டத்துறை அமைச்சா் கபில் மிஸ்ரா கூறுகையில், ஜன் சேவா சதன் என்ற இடத்தில் முதல்வா் பொதுமக்களின் குறைகளை விசாரிப்பாா். தில்லி முதல்வா் அலுவலகம் பொதுமக்களுக்கு திறக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் மிஸ்ரா கூறினாா்.
முதல்வரின் அலுவலக திறப்பு விழாவில் குப்தா மற்றும் அவரது குடும்பத்தினா் கலந்து கொண்ட ’ஹவன்’ இடம்பெற்றது. இப்போது வடக்கு தில்லியின் ஷாலிமாா் பாக் பகுதியில் வசிக்கும் ரேகா குப்தா, புதுப்பிப்பு பணிகள் நிறைவடைந்த பிறகு ராஜ் நிவாஸ் மாா்க்கில் இருக்கும் அரசு இல்லத்துக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.