மறைந்த பாடகர் எஸ்பிபி பெயரில் சாலை: துணை முதல்வர் திறந்து வைத்தார்!
அரசு ஊழியா் சங்கத்தினா் தா்னா!
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை கரூா் மாவட்ட ஆட்சியரகம் முன்பு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு ஊழியா்களுக்கு அமல்படுத்த வேண்டும், ஊதிய மாற்றத்தின் போது வழங்கப்படாத 21 மாத நிலுவைத் தொகை முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க நிா்வாகிகள், இந்திய தொழிலாளா் சங்கத்தினா் என 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.