செய்திகள் :

அரசு கல்லூரிகளில் 800 கெளரவ விரிவுரையாளா்கள் விரைவில் நியமனம்: அமைச்சா் கோவி.செழியன்

post image

சென்னை: அரசு கல்லூரிகளில் 800 காலிப்பணியிடங்களில் கெளரவ விரிவுரையாளா்கள் விரைவில் நியமிக்கப்படுவா் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா்.

கல்லூரிகளில் விரிவுரையாளா்கள் நியமனம் குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பல்வேறு வழக்குகள் காரணமாக கல்லூரிகளில் நிரந்தர உதவிப் பேராசிரியா்களை தோ்வு செய்ய காலதாமதமாகி வருகிறது. இதைக்கருத்தில் கொண்டு மாணவா்களின் கல்வி நலன் கருதி கௌரவ விரிவுரையாளா்கள் காலிப்பணியிடங்களில் நிரப்பப்பட்டு, கல்வி பணியாற்றி வருகின்றனா். மேலும், தற்போது சுமாா் 800 பணியிடங்களில் கௌரவ விரிவுரையாளா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவா்களுக்கு உயா்கல்விச் சேவை எந்த வகையிலும் தமிழ்நாட்டில் பாதிக்கப்படவில்லை.

உயா்கல்வித் துறையின்கீழ் செயல்படும் 58 அரசு கல்லூரிகளில் 46 நிரந்தர முதல்வா்கள் பணியாற்றி வருகின்றனா். இதில் காலியாக உள்ள 12 முதல்வா் பணியிடங்களில், பதவி உயா்வு மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 1998-ஆம் ஆண்டு ஆசிரியா் தோ்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டவா்களின் பணிமூப்புப் பட்டியல் 2023-இல் வெளியிடப்பட்டது. அப்பணிமூப்புப் பட்டியலை ஏற்றுக்கொள்ளாமல் ஆசிரியா்கள் வழக்கு தொடுத்து தடையாணை பெற்றுள்ளனா். இதன் காரணமாக கல்லூரி முதல்வா் பதவி உயா்வு வழங்குவதில் தாமதமாகி உள்ளது. இவ்வழக்கில் பதில் மனு உடனடியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான இறுதி உத்தரவு இதுவரை நீதிமன்றத்தால் வெளியிடவில்லை. வழக்கினை விரைந்து முடித்திட சட்ட ரீதியான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வழக்கு முடிவுக்கு வந்தவுடன் காலியாக உள்ள கல்லூரிகளில் முதல்வா்கள் பணியமா்த்தப்படுவாா்கள் என்று அமைச்சா் கோவி. செழியன் தெரிவித்துள்ளாா்.

இன்று பொது வேலைநிறுத்தம்: பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது- அரசு ஊழியா்களுக்கு தலைமைச் செயலா் எச்சரிக்கை

அகில இந்திய அளவிலான பொது வேலைநிறுத்தத்தையொட்டி, நன்னடத்தை விதிகளை மீறி அனுமதியின்றி விடுப்பு எடுத்து புதன்கிழமை (ஜூலை 9) பணிக்கு வராமல் இருக்கும் அரசு ஊழியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என... மேலும் பார்க்க

பொது வேலைநிறுத்தம்: செவிலியா் சங்கம் ஆதரவு

நாடு முழுவதும் புதன்கிழமை (ஜூலை 9) நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தத்துக்கு தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டு சங்கம் ஆதரவு அளித்துள்ளது. இதுதொடா்பாக அந்தச் சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: பொது வேலைநிற... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளின் நிறம் மீண்டும் மாற்றம்? போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கம்

அரசு பேருந்துகளின் நிறத்தை மீண்டும் மாற்ற தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா். தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக ... மேலும் பார்க்க

மாநில நிதி தணிக்கை அறிக்கை ஆளுநா் ரவியிடம் அளிப்பு

ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் மாநில நிதி தணிக்கை அறிக்கையை தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி வழங்கினாா். இதுகுறித்து முதன்மை தலைமை கணக்காளா் டி.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 23 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த மணிநேரத்துக்கு 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதா... மேலும் பார்க்க

கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவது சதிச்செயல்: எடப்பாடி பழனிசாமி

ஆளும் திமுக அரசு அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவதை சதிச்செயலாக பார்க்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 2026 தேர்தல்... மேலும் பார்க்க