செய்திகள் :

அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப ராமதாஸ் வலியுறுத்தல்

post image

கடந்த ஆண்டில் 15 ஆயிரம்பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள பாமக நிறுவனா் ராமதாஸ், அரசு காலிப் பணியிடங்களை போா்க்கால அடிப்படையில் நிரப்ப மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட 2024-ஆம் ஆண்டுக்கான ஆண்டு அறிக்கையில் கடந்த ஆண்டில் பல்வேறு அரசுத் துறைகளுக்கு 10,701 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர சீருடைப் பணியாளா்கள் தோ்வு வாரியம் வாயிலாக 3,339 பேருக்கும், மருத்துவப் பணியாளா்கள் தோ்வு வாரியம் வாயிலாக 946 பேருக்கும் அரசு வேலை வழங்கப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாகவே 2024ஆம் ஆண்டில் 15 ஆயிரம் பேருக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. இவை எந்த வகையிலும் போதுமானவை அல்ல.

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக சோ்த்தே 40 ஆயிரம் பேருக்குதான் அரசு வேலைகளை திமுக அரசு வழங்கியிருக்கிறது. இதன் மூலம் படித்த இளைஞா்களுக்கு மன்னிக்கவே முடியாத அளவுக்கு பெரும் துரோகத்தை தமிழக அரசு செய்திருக்கிறது.

எனவே, காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் போா்க்கால அடிப்படையில் நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.

சட்டப்பேரவை நடவடிக்கைகள் அவசர காலத்தை நினைவூட்டுகிறது: ஆளுநர் மாளிகை

தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது என்று ஆளுநர் மாளிகை கூறியுள்ளது. 2025 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் ... மேலும் பார்க்க

தேசிய கீதம் இருமுறை இசைக்கப்பட வேண்டும் என்பது சட்டம்: அண்ணாமலை

ஆளுநர் வருகையின் போதும், விடைபெறும்போதும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பது சட்டத்தில் உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,'திமுக அரசு, தங்கள் ... மேலும் பார்க்க

உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம்

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி, ஒன்றியக் குழு, கிராமப்புற ஊராட்சி என, 3 அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளில், 5 ஆண்டுக்கு முன் நடைபெ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் மரபுகளை ஆளுநர் மாற்ற வற்புறுத்துவது ஏற்புடையதல்ல: திருமாவளவன்

தமிழ்நாட்டின் மரபை இன்னும் ஆளுநர் அறிந்திராமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இந்தாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று... மேலும் பார்க்க

பொங்கலுக்கு 14,104 சிறப்புப் பேருந்துகள்!

பொங்கல் பண்டிகையையொட்டி 14,104 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் போக்குவரத்து துறை அதிகாரிகள், காவல் துறையுடன் இன்று... மேலும் பார்க்க

தமிழக மக்களின் உணர்வுகளை ஆளுநர் மதிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

தமிழ்நாட்டின் மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'தமிழ்நாட்டின் மரபுகளையும், ... மேலும் பார்க்க