கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனை; தஞ்சையில் சிக்கிய கும்பலி...
அரசு திட்டங்களில் முதல்வர் பெயரை பயன்படுத்தலாம்! சி.வி. சண்முகத்துக்கு அபராதம் - உச்ச நீதிமன்றம்
புது தில்லி: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அரசு திட்டங்களில் தலைவர்களின் பெயர்கள் மற்றும் படங்களைப் பயன்படுத்தத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடையும் பிறப்பித்துள்ளது.
அரசு திட்டங்களில், தலைவர்களின பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்ததோடு, உள்நோக்கத்துடன் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற நேரத்தை வீணடித்துவிட்டதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது.