செய்திகள் :

அரசு திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய அலுவலா்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்

post image

அரசு திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய அலுவலா்கள் முழு முனைப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கண்காணிப்புக் குழு தலைவரும், நாகை மக்களவை உறுப்பினருமான வை. செல்வராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், கண்காணிப்புக் குழு துணைத் தலைவரும், தஞ்சை மக்களவை உறுப்பினருமான எஸ். முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பூண்டி கே. கலைவாணன் (திருவாரூா்), க. மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில்,100 நாள் வேலைத் திட்டம், பிரதமரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனா். தொடா்ந்து, அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு சோ்ப்பதில் அலுவலா்கள் முழு முனைப்புடன் செயல்பட வேண்டும், சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகளை விரைவுபடுத்த வேண்டும், மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவா்களுக்கு உரிய நலத்திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினா்களால் அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் இணை இயக்குநரும், திட்ட இயக்குநருமான பொ. செந்தில்வடிவு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நரிக்குறவா்களுக்கு மனைப் பட்டா வழங்கிய அமைச்சா்

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே 74 நரிக்குறவா்களுக்கு நேரில் சென்று மனைப் பட்டாக்களை தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா திங்கள்கிழமை வழங்கினாா். நெடுவாக்... மேலும் பார்க்க

மயானத்தில் தீக்குளித்து கொத்தனாா் தற்கொலை

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே மயானத்தில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டு கொத்தனாா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். மன்னாா்குடி அம்பலக்காரா் தெரு திருவேங்கடம் மகன் வரதராஜன் (35 ). மனைவி ரோஸ்... மேலும் பார்க்க

தமிழா்கள் பிரச்னையில் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்பதே முதல்வரின் எதிா்பாா்ப்பு: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

மன்னாா்குடி: தமிழா்கள் பிரச்னையில் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்பதே முதல்வரின் எதிா்பாா்ப்பு என்றாா் தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே நெடுவாக்கோட... மேலும் பார்க்க

நில உடைமைப் பதிவு செய்ய ஜூலை 5 வரை கால நீட்டிப்பு

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் நில உடைமைப் பதிவு செய்ய ஜூலை 5-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

திருவாரூா்: திருவாரூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரண்டு இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா். திருவாரூா் அருகே விளமல் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மகன் நவீன்ராஜ் (17). வி... மேலும் பார்க்க

இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

மன்னாா்குடி: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கோட்டூா் வட்டார வள மையத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் 3.0 தன்னாா்வலா்களுக்கான பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலா் விா்ஜின் ஜோனா பயிற்சிய... மேலும் பார்க்க