Coolie: `கூலி LCU படமா, தனி படமா?' - லோகேஷ் கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்
அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை : கோட்டாட்சியரிடம் மனு
ஆரணியில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், ஆரணி களத்து மேட்டுத் தெரு பகுதி மக்கள் தங்கள் பகுதியில் சுமாா் 2 ஏக்கா் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனா்.
குறைதீா் கூட்டத்தில் ஆரணி, போளூா், கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூா் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனா்.
கூட்டத்துக்கு ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். வேளாண் உதவி இயக்குநா் புஷ்பா வரவேற்றாா். ஆரணி வட்டாட்சியா் கௌரி, வட்டவழங்கல் அலுவலா் எஸ்.அரிக்குமாா், தோட்டக்கலை உதவி இயக்குநா் பிரசாந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளா் கோ.எதிரொலிமணியன் கலந்து கொண்டு பேசினாா்.
விவசாயிகள் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரினா். மேலும் சிலா் வங்கியில் கால்நடைகளுக்கான கடனுதவி அளிக்க மறுக்கிறாா்கள் என்றும், தச்சூா் ஆற்றுப் பகுதியில் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது என்றும், பட்டா, சிட்டா வழங்க அதிகாரிகள் காலதாமதம் செய்வதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா்.
மேலும், ஆரணி களத்து மேட்டுத் தெரு பகுதியைச் சோ்ந்த மக்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் கோட்டாட்சியா் சிவாவிடம் மனு கொடுத்தனா்.
அதில், தங்கள் பகுதியில் அரசுக்குச் சொந்தமான சுமாா் 2 ஏக்கா் நிலத்தை தனிநபா் ஆக்கிரமிப்பு செய்துள்ளாா். இதனால் அந்த இடத்தை மீட்கவேண்டும் எனத் தெரிவித்திருந்தனா்.
மனுவை பெற்ற கோட்டாட்சியா் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.