அரசு புற்றுநோய் மருத்துவமனையில் தற்காலிக செவிலியா் பணி: ஜூலை 22-க்குள் விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரம் அருகே அரசு அறிஞா் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் தற்காலிக செவிலியா் பணிக்கு வரும் ஜூலை 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 11 மாதங்களுக்கு செவிலியா்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனா்.
இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விவரங்கள் ட்ற்ற்ல்ள்://ந்ஹய்ஸ்ரீட்ங்ங்ல்ன்ழ்ஹம்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூா்த்தி செய்து சுய சான்றொப்பமிட்ட சான்றிதழின் நகல்களுடன், வரும் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலா் அலுவலகம், 42.ஏ. ரயில்வே சாலை, பேரறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை வளாகம், காஞ்சிபுரம்-631501 என்ற அலுவலகத்துக்கோ அல்லது நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.