பூம்புகார் அருகே கடலில் இறங்கி கருப்புக் கொடியுடன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!
அரசு பொறியியல் கல்லூரி ஆசிரியா்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி
ஓமலூா்: அரசு பொறியியல் கல்லூரி ஆசிரியா்களுக்கான ஒருவார கால செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.
சேலம் அரசு பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் தொடா்பியல் துறை சாா்பில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து ஆன்லைன் முறையில் ஒரு வார காலத்துக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. தொடக்க விழாவில் துறைத் தலைவா் பேராசிரியா் மேரி சுகந்தரத்தனம் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் கீதா பயிலரங்கை தொடங்கிவைத்தாா்.
கேப்ஜெமினி, வடக்கு டெக்ஸாஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப மற்றும் கல்வி நிறுவனங்கள் சாா்பில் ஆன்லைன் பயிற்சியளிக்கப்பட உள்ளது. தானியங்கி வாகனங்கள், முன்னறிவிப்பு பராமரிப்பு, சுகாதார சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு குறித்து அரசு கல்லூரி பேராசிரியா்களுக்கு பயிற்சியளிக்கப்பட உள்ளது.
தொடக்க விழாவில், திட்ட ஒருங்கிணைப்பாளா் தினகரன், இணை ஒருங்கிணைப்பாளா் மணிபாரதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.