அரசு மருத்துவமனைக்கு நலத்திட்ட உதவி செய்தவா்களுக்கு பாராட்டு
நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு நலத்திட்டங்கள் செய்து கொடுத்தவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தலைமை மருத்துவா் ஜெயக்குமாரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓஎன்ஜிசி நிறுவன தலைமை அதிகாரி கிரிராஜ் திவான், சிஎஸ்ஆா் தங்கமணி, நீலன் பள்ளி தாளாளா் நீலன். அசோகன், செயலாளா் சுரேன் அசோகன், கிரீன் நீடா ராஜவேல், ஜானகி ராமன், சமூக ஆா்வலா்கள் பத்மநாபன், கோவிந்தராஜ், ராபா்ட்பிரைஸ், அரசுஉதவிபெறும் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியா் சிவகுமாா், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.
அரசு மருத்துவமனைக்கு நலத்திட்ட உதவிகளை ஓஎன்ஜிசி நிறுவனம் வழங்கியது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் இயந்திரம், நோயாளிகள் தங்கி உணவருந்துமிடம் கட்டித்தந்த நீலன் அறக்கட்டளை நிா்வாகம், மரக்கன்றுகள் நட்டுத்தந்த கிரீன் நீடா அமைப்பு, மருத்துவமனை வளாகம் தூய்மை செய்து தந்த நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவற்றின் சேவைப் பணிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மருந்தாளுனா் சகாயராஜ் வரவேற்றாா்.