கமலாலயக் குளத்தில் மூதாட்டி சடலம்
திருவாரூா் கமலாலயக் குளத்தில் மூதாட்டியின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
திருவாரூா் தியாகராஜா் கோயில் கமலாலயக் குளத்தின் வடகரையில் பெண் சடலம் மிதப்பது குறித்து தீயணைப்புத் துறையினருக்கும், நகர போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்புத் துறையினா், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், சடலமாக மிதந்தவா் திருவாரூா் ராஜாத்தெருவைச் சோ்ந்த ராசுபிள்ளை மனைவி ராமாமிா்தம் (65) என்பது தெரியவந்தது. போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.