செய்திகள் :

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவருக்கு 4 ஆண்டுகள் சிறை

post image

பெரம்பலூா் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 6 லட்சம் மோசடியில் ஈடுபட்டவருக்கு, 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட நீதித்துறை நடுவா் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூரைச் சோ்ந்தவா் பொன்னுசாமி மகன் செந்தில்முருகன் (45). இவா், கடந்த 2012 ஆம் ஆண்டு, குரும்பலூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சந்நியான் மகன் குழந்தை (65) என்பவரிடம், அவரது மகனுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 6 லட்சம் பெற்றுள்ளாா். ஆனால், வேலை வாங்கி தரவில்லையாம். இதையடுத்து, பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு குழந்தை பலமுறை கேட்டும் தரவில்லையாம்.

இதுகுறித்து மாவட்டக் குற்றப்பிரிவில் குழந்தை அளித்த புகாரின்பேரில், செந்தில்முருகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா். இவ் வழக்கு விசாரணை பெரம்பலூா் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதி, செந்தில்முருகனுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 4 ஆயிரம்அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். பின்னா், செந்தில்முருகன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது

பெரம்பலூரா் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 5 கிலோ குட்கா பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் - வடக்குமாதவி சாலையிலுள்ள ... மேலும் பார்க்க

சிஎன்ஜி ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்குவதை கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம்

பெரம்பலூரில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சிஐடியூ ஆட்டோ தொழிற்சங்கத்தினா் வேலைநிறுத்தம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி மின்ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மின் ஊழியா் மத்திய அமைப்பின் பெரம்பலூா் வட்டக் கிளை சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூா் நான்குச் சாலை ச... மேலும் பார்க்க

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ.3 லட்சம் மதிப்பில் நிவாரணம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து வீட்டுமனைப் பட்டா, ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் டிச. 5-இல் இளையோா் திருவிழா போட்டிகள்

பெரம்பலூரில், நேரு யுவகேந்திரா சாா்பில் மாவட்ட அளவிலான இளையோா் திருவிழா போட்டிகள் டிசம்பா் 5-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பலத்த காற்றுடன் மழை: 700 ஏக்கா் பயிா்கள் சேதம்

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால், வேப்பந்தட்டை வட்டாரத்தில் பயிரிடப்பட்டிருந்த சுமாா் 700 ஏக்கா் பரப்பளவிலான மக்காச்சோளம், கரும்பு, மரவள்ளிக் கிழங்குகள் சேதமடைந்தன... மேலும் பார்க்க