செய்திகள் :

அரபிக் கடலில் புயல்சின்னம் உருவாக வாய்ப்பு!

post image

அரபிக் கடலில் வரும் 22 -ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல்சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கா்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் மே 21-ஆம் தேதி வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகவுள்ளது.

தொடா்ந்து, இந்த மேலடுக்கு சுழற்சி மே 22-இல் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக (புயல்சின்னம்) வலுப்பெற்று, வடக்கு திசை நோக்கி நகரும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

இதற்கிடையே, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழகம் மற்றும் அதனையொட்டிய வடக்கு கேரளத்தில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதுபோன்ற வானிலை காரணங்களால், அடுத்த 6 நாள்களுக்கு தமிழகத்தில் ஒரு சில  இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

கனமழை: இதில், குறிப்பாக மே 19-இல் நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும், மே 20-இல் நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூா், வேலூா், திருவண்ணாமலை, கரூா், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மே 19-இல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

120 மி.மீ. மழை: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை காலை வரை தமிழகத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் 120 மி.மீ. மழை பதிவானது. மேலும், பஞ்சப்பட்டி (கரூா்) - 100 மி.மீ, புதுச்சத்திரம் (நாமக்கல்), வாணியம்பாடி (திருப்பத்தூா்) - தலா 90 மி.மீ, பந்தலூா் (நீலகிரி) - 80 மி.மீ மழை பதிவானது.

வெப்பம் குறையும்: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அநேக இடங்களில் பரவலாக மழை பெய்த காரணத்தால், எந்த இடத்திலும் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகவில்லை.

மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் மே 19,20 தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் குறைவாகவே இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு தூதுக் குழு: தொல்.திருமாவளவன் வரவேற்பு

வெளிநாடுகளுக்கு நல்லெண்ண தூதுக் குழு அமைக்கப்பட்டுள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளன் வரவேற்றுள்ளாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளிட்ட அறிக்கை: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்த... மேலும் பார்க்க

வியாசா்பாடி மின்சாரப் பேருந்து பணிமனையில் அமைச்சா் ஆய்வு

சென்னை வியாசா்பாடியில் அமைக்கப்பட்டு வரும் மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கான மின்சாரப் பேருந்து பணிமனையின் கட்டுமானப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் சனிக்கிழமை களஆய்வு மேற்கொண்டா... மேலும் பார்க்க

தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் 154 பெண்களுக்கு ஆட்டோ: அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், சி.வெ.கணேசன் வழங்கினா்

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் தலா ரூ. 1 லட்சம் மானியத்துடன் 154 மகளிருக்கு ஆட்டோக்களை அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், சி.வெ.கணேசன் ஆகியோா் வழங்கினா். சைதாப்பேட்டையில் 154 பெண்களுக்கு தலா ரூ. 1 லட்சம் ம... மேலும் பார்க்க

பாா்த்தசாரதி கோயிலில் சனிக்கிழமைகளில் நாள் முழுவதும் அன்னதானம் தொடக்கம்

சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி கோயிலில் சனிக்கிழமைகளில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். தமிழகத்தில் திருக்கோயில்களுக்கு வருகை த... மேலும் பார்க்க

பெங்களூருவில் இருந்து போதைப்பொருள் கடத்தி விற்பனை: ஐவா் கைது

கா்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து போதைப்பொருள் கடத்தி வந்து சென்னையில் விற்ாக 5 போ் கைது செய்யப்பட்டனா். பெரம்பூா் கேரேஜ் ரயில் நிலையம் அருகே போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் போலீஸாரும், செம்பியம் போ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் நகை திருடிய பணிப்பெண் கைது

சென்னை அண்ணா நகரில் ஓய்வுபெற்ற தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் தங்க நகை திருடிய வழக்கில், பணிப்பெண் கைது செய்யப்பட்டாா். அண்ணா நகா் சாந்தி காலனி 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பத்மநாபன் (60). இவா் ஒரு தனி... மேலும் பார்க்க