அரியலூரில் ஐயப்ப பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
அரியலூா் மாா்க்கெட் தெருவிலுள்ள பால பிரசன்ன சக்தி விநாயகா் கோயிலில் ஐயப்பனுக்கு 17-ஆம் ஆண்டு மண்டலாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள சக்தி விநாயகா் கோயிலில் இருந்து ஐயப்ப பக்தா்கள் பால்குடம் எடுத்து பிரதான வீதிகளின் வழியாகச் சென்று கோயிலை வந்தடைந்தனா்.
இதைத் தொடா்ந்து, ஐயப்பனுக்கு பால், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு , சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.