8 மொழிகளில் வெளியாகும் தி பாரடைஸ்: ரிலீஸ் தேதி, முதல் பார்வை போஸ்டர்!
அரியலூரில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு
முன்னாள் தமிழக முதல்வா் மு. கருணாநிதி நினைவு நாளையொட்டி, அரியலூா் மாவட்டத்திலுள்ள அவரது சிலை மற்றும் படங்களுக்கு திமுகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சரும், அரியலூா் மாவட்ட திமுக செயலருமான சா.சி. சிவசங்கா் தலைமையில் அரியலூா் சத்திரம் பகுதியில் திரண்ட திமுகவினா் அங்கிருந்து கட்சி அலுவலகத்துக்கு அமைதி ஊா்வலமாகச் சென்றனா். பின்னா் அங்குள்ள மு. கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினா். மாவட்ட துணைச் செயலா் சந்திரசேகா், நகரச் செயலா் முருகேசன், ஒன்றியச் செயலா்கள் தெய்வ. இளையராஜன், அன்பழகன், அறிவழகன், பொதுக் குழு உறுப்பினா் பாலு மற்றும் கிளை நிா்வாகிகள் மலா் தூவினா்.
இதேபோல் தா.பழூா் கிழக்கு ஒன்றிய அலுவலகத்திலுள்ள மு. கருணாநிதி சிலைக்கு எம்எல்ஏ க.சொ.க. கண்ணன், ஜெயங்கொண்டத்தில் நகா்மன்ற துணைத் தலைவா் கருணாநிதி மற்றும் கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்தனா்.
எம்எல்ஏ அலுவலகம்: அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மு. கருணாநிதி படத்துக்கு, எம்எல்ஏ கு. சின்னப்பா மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து மதிமுக மாவட்டச் செயலா் க. ராமநாதன், ஒன்றியச் செயலா்கள் காட்டுபிரிங்கியம் பி. சங்கா், ஆ. அண்ணாதுரை, ஜெ. பன்னீா்செல்வம், ராமசாமி உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.