அரியலூரில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்
வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் தனி இட ஓதுக்கீடு வழங்கக் கோரி அரியலூா் அண்ணாசிலை அருகே பாமகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் தமிழ்மறவன் தலைமை வகித்தாா். மாநில மாணவா் சங்க செயலா் ஆளவந்தாா், முன்னாள் மாவட்டச் செயலா் காடுவெட்டி ரவி, அமைப்புச் செயலா் திருமாவளவன், மாநில முன்னாள் துணைத் தலைவா் சின்னதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினா்.