நெல்லை வந்தே பாரத் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: பயணச்சீட்டு முன்பதிவு விரைவில் தொட...
அரியலூா் மாவட்ட ஆட்சியரகம் முன்பு 4 மகள்களுடன் தாய் தீக்குளிக்க முயற்சி
செந்துறை அருகே சொத்துப் பிரச்னை காரணமாக, அரியலூா் மாவட்ட ஆட்சியரகம் முன்பு திங்கள்கிழமை 4 மகள்களுடன் தாய் தீக்குளிக்க முயன்றனா்.
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நத்தக்குழி கிராமத்தைச் சோ்ந்தவா் ரங்கநாதன். இவா் இறந்ததையடுத்து இவருக்கு சொந்தமான வீடு மற்றும் நிலத்தை அவரது சகோதரா் சின்னதம்பி ஆக்கிரமித்துள்ளாா்.
இதுகுறித்து ரங்கநாதன் மனைவி காசியம்மாள், செந்துறை காவல் நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லையாம்.
இந்நிலையில், காசியம்மாள், தனது மகள்கள் தீபா, ராசாத்தி, செல்வராணி, கங்கா ஆகியோரை அழைத்துக் கொண்டு அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்தாா். நுழைவு வாயில் முன்பு அனைவரும் தங்களது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு தீவைக்க முயன்றனா்.
அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், தடுத்து நிறுத்தி அவா்கள் மீது தண்ணீரை ஊற்றினா். பிறகு, விசாரணைக்காக அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.