அரசு ஊழியர் தற்கொலை! மரண வாக்குமூலம் இருந்தும் அலட்சியம்! தமிழக காவல் மீது பாஜக ...
அருணகிரிநாதா் குருபூஜை
ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் அருணகிரிநாதா் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு வள்ளி- தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு முருகப் பெருமான் சந்நிதியில் கந்தா் அனுபூதி, திருப்புகழ் பாடினா். விழா ஏற்பாடுகளை அருணகிரிநாதா், வாரியாா் சுவாமிகள் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.