செய்திகள் :

அருள் தரும் முருகன்

post image

உறையூரைத் தலைநகராகக் கொண்டு, சோழர்கள் ஆண்டபோது வன விலங்குகளால் விவசாயப் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டது. வயலூரில் விலங்குகளை சிலர் வேட்டையாடியபோது, தாகம் ஏற்பட்டது. அங்கு மூன்று கிளையாக இருந்த கரும்பை அவர்கள் ஒடித்தபோது ரத்தம் கசிந்தது. அதன் கீழே சிவலிங்கம் இருந்தது. பிற்காலத்தில் அங்கு சிறிய கோயில் அமைக்கப்பட்டது. அதுதான் வயலூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில். மூலவர் சுப்பிரமணிய சுவாமி. ஆதிநாதர். அம்மன் } வள்ளி தேவசேனா ஆதிநாயகி. தல விருட்சம் வன்னிமரம். சக்தி தீர்த்தம்.

உறையூரை ஆண்ட கேசரி வர்மன், ராஜேந்திர சோழன், முதலாம் ராஜ ராஜ சோழன் உள்ளிட்டோர் கோயிலுக்கு நிலம், பொன் கொடுத்ததும், விளக்கு எரிக்க மானியம் கொடுத்ததும் கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளன. பிற இடங்களில் தனித்து நிற்கும் முருகன் வயலூரில் தெய்வகுஞ்சரி, வள்ளியோடு இணைந்து அருள்பாலிக்கிறார்.

ஆதிநாதர், ஆதிநாயகியாகிய சிவன், பார்வதியை வணங்கியவுடன்தான் முருகனை வணங்க முடியும். ஆதிநாதர் சந்நிதியில் உள்ள சுந்தரதாண்டவமூர்த்தி விக்ரஹம் திருவாச்சி, காலின் கீழ் முயலகன்,சடாமுடி இல்லை. கிரீடம் மட்டும் உள்ளது. கால் தூக்காமல் நடனமாடும் காட்சிக்கு "சுந்தரத் தாண்டவம்' என்று பெயர்.

அருணகிரிநாதருக்கு அருள் தந்து திருப்புகழ் பாடும் திறன்

தந்தவர் பொய்யாக் கணபதி. அவர் கையில் மாங்கனியோ, மாதுளங்கனியோ உண்டு. கணபதி சந்நிதிக்கு அருகே அருணகிரிநாதருக்கு பீடம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னர், மயில்மேல் அமர்ந்த நிலையில் முத்துக்குமாரசாமி சந்நிதி.

"திருமணம் ஆகாதவர்கள், முருகனுக்குத் திருமணம் நடத்துவதாக வேண்டினால் திருமணம் நடக்கிறது. நாக தோஷம் உள்ளவர்கள் செவ்வாயன்று திருக்குளத்தில் மூழ்கி முருகனைத் தரிசித்தால் திருமணத் தடை அகன்றுவிடுகிறது' என்பது ஐதீகம். குழந்தை வரம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வ விருத்திக்கு இத்தலத்து முருகனை வேண்டுகின்றனர்.

திருமுருக கிருபானந்த வாரியார் வயலூர் முருகன் கோயிலுக்குத் திருப்பணிக் குழுத் தலைவராக இருந்து செயல்பட்டார். இக்கோயில் கும்பாபிஷேகம் பிப்ரவரி 19}இல் நடைபெறவுள்ளது. திருச்சியிலிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் வயலூர் உள்ளது.

}ஆர்.வேல்முருகன்

தேர்வு பயம் தீர...

திருமாலின் மற்றொரு வடிவம்தான் வராகர். பன்றியின் முகமும், மனித உடலும் கொண்ட உருவமாக பூமியை தனது கொம்பில் தாங்கி, காப்பதற்காக நாராயணன் உருவெடுத்தார். அரக்கனைக் கொன்று பூமியைக் காத்தார். இந்த ஊன உடம்புக்... மேலும் பார்க்க

தரணி போற்றும் தைப்பூச வழிபாடு

தை மாதத்தில், பூச நட்சத்திரத்தன்று பெüர்ணமியோடு சேர்ந்து வரும் நாள் தைப்பூச விழாவாகும். இந்த நாளில், மக்கள் புனித நீராடுவர். தேவாரங்களில் பூசம் தீர்த்தமாடும் பெருந்திருவிழாவாகவும் குறிக்கப்படுகிறது. வ... மேலும் பார்க்க

வரம் தரும் வாரம்!

ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (பிப்ரவரி 7 - 13) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)திறமையும் தன்னம்பிக்... மேலும் பார்க்க

பிள்ளைப் பேறு கிடைக்க...

யமுனை நதிக்கரையில் வேதபுரத்தில் கருத்தமன் என்ற முனிவர் பிள்ளைப் பேறு இல்லாமல், சிவனை பிரார்த்தித்தார். குழந்தை பிறந்தபோது, "புண்டரீகர்' எனப் பெயரை முனிவர் சூட்டினார். பல்வேறு இடங்களில் உள்ள சிவத் தலங்... மேலும் பார்க்க

குறைகள் தீர....

சோழ மன்னர் ஒருவருக்கு ஏற்பட்ட குறை நீங்க, பல தலங்களுக்குச் சென்று வழிபட்டும் பலன் கிட்டவில்லை. அவரது கனவில் திருமால் முதியவர் வடிவில் தோன்றி, தான் காஞ்சிபுரத்தில் திருவூரகப் பெருமாளாக அருள் செய்வதாகவு... மேலும் பார்க்க

தோஷங்கள் போக்கும்...

அசுரர்களை அழித்ததால் தனக்கு ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க, பரிகாரம் கேட்டார் முருகன். அப்போது, "கீழ்வேளூரில் சுயம்புலிங்கமாய் அருள்பாலிக்கும் தன்னைச் சுற்றிலும் நவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும... மேலும் பார்க்க