செய்திகள் :

அரையிறுதியில் இன்டர் மிலன் த்ரில் வெற்றி: சோகத்தில் பார்சிலோனா ரசிகர்கள்!

post image

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் இன்டர் மிலன் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

முதல்கட்ட அரையிறுதி 3-3 என சமநிலையில் இருந்தது. அதனால், இரண்டாம் கட்ட அரையிறுதி போட்டி மீது அதிகமாக எதிர்பார்ப்பு இருந்தது.

இன்டர் மிலனின் சொந்த மண்ணில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் பாதியில் இன்டர் மிலன் 2 கோல்கள் (21’, 45+1’) அடித்து முன்னிலைப் பெற்றது.

இரண்டாம் பாதியில் மீண்டெழுந்த பார்சிலோனா தொடர்ச்சியாக 54,60,87ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தியது.

கடைசி 2 நிமிடங்கள் மீதமிருந்த வேளையில் இன்டர் மிலனின் அசெர்பி ( 90+3’) கோல் அடித்து போட்டியை கூடுதல் நேரத்துக்கு எடுத்துச் சென்றார்.

பின்னர் கூடுதல் நேரத்தில் 99ஆவது நிமிஷத்தில் இன்டர் மிலனின் பிரட்டசி கோல் அடித்து அசத்தினார். கடைசிவரை போராடிய பார்சிலோனா அணியினால் கோல் அடிக்க முடியவில்லை.

இறுதியில் 4-3 (ஒட்டுமொத்தமாக 7-6) கோல்கள் கணக்கில் இன்டர் மிலன் அசத்தல் வெற்றி பெற்றது.

பார்சிலோனாவின் கோப்பை கனவு மீண்டும் தகர்ந்ததினால் அந்த அணியின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளார்கள்.

டியூட் புதிய போஸ்டர்!

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.நடிகர் பிரதீப் ரங்கநாதன் டிராகன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்... மேலும் பார்க்க

ஹெச். வினோத் இயக்கத்தில் ரஜினி?

நடிகர் ரஜினிகாந்த் தன் அடுத்தப் படத்திற்கான கதையைக் கேட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தை முடித்துவிட்டு ஜெயிலர் - 2 படப்பிடிப்பில் உள்ளார். இதில், கூலி ஆகஸ்ட்... மேலும் பார்க்க

தாமஸ் முல்லரின் கடைசி போட்டி: பீர், கோப்பையுடன் கொண்டாடிய பெயர்ன் மியூனிக்!

ஜெர்மனி ஜெயண்ட்ஸ் எனப்படும் பெயர்ன் மியூனிக் அணிக்காக 25 ஆண்டுகளாக விளையாடிவரும் தாமஸ் முல்லர் இந்த சீசனோடு அணியை விட்டு பிரிகிறார்.35 வயதாகும் தாமஸ் முல்லர் பெயர்ன் மியூனிக் அணிக்காக 750 போட்டிகளில் ... மேலும் பார்க்க

விஜய் சேதுபதியின் ஏஸ் டிரைலர்!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ஏஸ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'மகாராஜா’ மற்றும் ’விடுதலை - 2ம் பாகம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் அவருக்கு வெற்றிப... மேலும் பார்க்க

குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை முறியடித்த மெஸ்ஸி..!

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையை குறைவான போட்டிகளிலே லியோனல் மெஸ்ஸி முறியடித்தார்.ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தற்போது இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார். மினசோட்டாவி... மேலும் பார்க்க

பிரம்மயுகம் இயக்குநரின் புதிய படப்பெயர்!

பிரணவ் மோகன்லால் - ராகுல் சதாசிவன் கூட்டணியில் உருவான திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மயுகம் படத்தின் இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் ஹாரர் படத்தில் நடித்து முடி... மேலும் பார்க்க