செய்திகள் :

அரையிறுதியில் ஸ்ரீகாந்த்

post image

கனடா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறினாா்.

ஆடவா் ஒற்றையா் காலிறுதியில் அவா், 21-18, 21-19 என்ற நோ் கேம்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த சீன தைபேவின் சௌ டியென் சென்னை வீழ்த்தி அசத்தினாா். இந்த ஆட்டம் 43 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. இத்துடன் சௌ டியெனை 10-ஆவது முறையாக சந்தித்த ஸ்ரீகாந்த், 4-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளாா்.

உலகத் தரவரிசையில் தற்போது 49-ஆம் இடத்திலிருக்கும் அவா், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் ஜப்பானின் கென்டா நிஷிமோடோவுடன் அரையிறுதியில் மோதுகிறாா். நிஷிமோடோவுடன் 10 முறை நேருக்கு நோ் மோதியிருக்கும் ஸ்ரீகாந்த், அதில் 6 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறாா். தற்போது ஸ்ரீகாந்த் மட்டுமே களத்திலிருக்கும் இந்தியராவாா்.

சங்கா் முத்துசாமி தனது காலிறுதி ஆட்டத்தில் 15-21, 21-5, 17-21 என்ற கேம்களில், நிஷிமோடோவிடம் 79 நிமிஷம் போராடி தோல்வியுற்றாா். அதேபோல் மகளிா் ஒற்றையா் காலிறுதியில், ஷ்ரியன்ஷி வலிஷெட்டி 21-12, 19-21, 19-21 என்ற வகையில் டென்மாா்க்கின் அமேலி ஷுல்ஸிடம் 53 நிமிஷங்களில் வீழ்ந்தாா்.

ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாகும் விக்ரம் மகள்!

நடிகர் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடிகை சாரா அர்ஜூன் நடிக்கவுள்ளார். துரந்தர் என்ற பெயரில் தயாராகிவரும் இப்படத்தில், சாரா அர்ஜூன் முதல்முறையாக ஹிந்தியில் நாயகியாக அறிமுகமாகிறார். 2011-ம் ஆண்டில் வெளிய... மேலும் பார்க்க

கால்பந்து உலகில் மீண்டும் சோகம்..! பயர்ன் மியூனிக் இளம் வீரர் மருத்துவமனையில் அனுமதி!

கிளப் உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் பயர்ன் மியூனிக் வீரர் ஜமால் முசியாலா (22) பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் கிளப் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்... மேலும் பார்க்க

வாத்தி 2 இல்லை, லக்கி பாஸ்கர் 2 இருக்கு..! வெங்கி அட்லூரி பேட்டி!

இயக்குநர் வெங்கி அட்லூரி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் லக்கி பாஸ்கர் 2 படம் நிச்சயமாக எடுப்பேன் எனக் கூறியுள்ளார்.நடிகர் தனுஷின் வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்ச... மேலும் பார்க்க

நவரசத்தில் ஐந்து... விஷ்ணு விஷால், ருத்ராவின் புரமோஷன் விடியோ!

நடிகர் விஷ்ணு விஷாலும் அவரது தம்பியும் இணைந்து செய்த புரமோஷன் விடியோ வைரலாகி வருகிறது. நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய தம்பி ருத்ராவை நாயகனாக அறிமுகப்படுத்துகிறார். ரோமியோ பிக்சர்ஸ், விஷ்ணு விஷால் இணைந்... மேலும் பார்க்க

மெஸ்ஸி மேஜிக்: 2 கோல்கள், 1 அசிஸ்ட்... மீண்டும் ஆட்ட நாயகன் விருது!

அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்எஸ் தொடரில் லியோனல மெஸ்ஸி (38 வயது) இரண்டு கோல்கள் அடித்து இன்டர் மியாமிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார். கிளப் உலகக் கோப்பையில் இன்டர் மியாமி அணி பிஎஸ்ஜியுடன் ரவுண்ட் ஆஃ... மேலும் பார்க்க