செய்திகள் :

அறுவை சிகிச்சையில் கவனக்குறைவு; பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு; நடந்தது என்ன?

post image

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முதல் பிரசவத்துக்காக திருச்சி தில்லை நகரில் உள்ள தனியார் மருத்துவமனையை அணுகினார்.

கடந்த 26-09-2021 அன்று மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவரும், மயக்கவியல் மருத்துவரும் இணைந்து மயக்க மருந்து கொடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்து, பெண் குழந்தை பிறந்தது.

ஆனால், பிரசவம் நடந்ததற்குப் பிறகு அந்தப் பெண்ணுக்கு வலது காலில் உணர்விழப்பு, சோர்வடைதல், கட்டுப்பாடின்றி சிறுநீர் வெளியேறுதல் போன்ற உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டன.

இதற்கு, முதுகெலும்பில் சரிவர மயக்க மருந்து கொடுக்காததே காரணம் எனக் கூறப்படுகிறது. இப்பிரச்னைகளுக்கு மருத்துவம் பார்த்தும் அவருக்கு உரிய தீர்வு கிட்டாததால், இதுவரை அவரால் தரையில் குனிந்து உட்கார முடியாமல், சரிவர நடக்க முடியாமல் பல பிரச்னைகளைச் சந்தித்தார்.

இதையடுத்து அந்தப் பெண், மருத்துவர்களின் அலட்சியத்தால் தனக்கு ஏற்பட்ட இன்னலுக்கும், மன உளைச்சலுக்கும், வருங்கால மருத்துவச் செலவுக்கும் நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் கடந்த 18-08-2022 அன்று மனுத் தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு நேற்று வெள்ளிக்கிழமை விசாரித்தது.

trichy
trichy

விசாரணைக்குப் பிறகு, சிகிச்சையில் கவனக் குறைவு, மன உளைச்சல், வலிக்காகச் சரியாக மயக்க மருந்து கொடுக்காத தனியார் மருத்துவமனையானது மனுதாரருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடும், மருத்துவமனையின் மயக்க மருந்து நிபுணர் தனது பங்காக ரூ. 20 லட்சமும், வழக்குச் செலவுக்காக ரூ. 15,000-யும் வழங்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதுவும், இதை அனைத்தையும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கவனக்குறைவாக மருத்துவம் பார்த்ததாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மும்பை: வீட்டை எழுதிக்கொடுக்க மறுத்த தந்தை; கட்டையால் கால்களை அடித்து உடைத்த மகன்; என்ன நடந்தது?

மும்பையில் தனது பெயருக்கு வீட்டை எழுதிக்கொடுக்காததால் தந்தையின் காலை அவரது மகன் அடித்து உடைத்துள்ளார்.மும்பை தகிசர் கிழக்குப் பகுதியில் வசிப்பவர் விஜய் (73). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன... மேலும் பார்க்க

கடந்த மாதம் தற்கொலை செய்த மனைவி; சோகத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு - திருச்சி சோகம்

திருச்சி, இ.பி ரோடு, வேதாத்திரி நகர், அந்தோணி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜய் என்கிற டோரி விஜய் (28). இவர், ஆட்டோ ஓட்டுநராக பணி செய்து வந்தார். இவரின் மனைவி கடந்த மாதம் 26- ம் தேதி மன அழுத்தம் ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை., பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு... மாணவி புகார் டு இறுதி வாதம் - இதுவரை நடந்தது என்ன?

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் எதிரான வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது.சென்னை அண்ணா பல்கலைக்கழக ... மேலும் பார்க்க

``உன் வீட்டில் சொத்தை எழுதி வாங்கிட்டு வா..” - மனைவியின் வாயில் சூடு வைத்த கொடூரக் கணவன்

தூத்துக்குடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வ அந்தோணி. மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார் . இவருக்கும்அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சிந்துஜா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ந... மேலும் பார்க்க

``நீண்டகால விசாவில் மதுரையில் உள்ள பாகிஸ்தானியருக்கு வாக்குரிமை?'' - வழக்கறிஞர் புகாரால் பரபரப்பு

நீண்டகால விசாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக மதுரையில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் நாட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கலெக்டரிடம் வழக்கறிஞர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மது... மேலும் பார்க்க

குடிபோதையில் தகராறு; பணம் தர மறுத்த தந்தையை கொடூரமாக கொலை செய்த இளைஞர்

தென்காசி மாவட்டம், குருவிகுளம் அருகேயுள்ள மலையான்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லையா. இவர், அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள். இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்கு... மேலும் பார்க்க