செய்திகள் :

`அவரின் பல வருட கனவு’ - இயக்குநர் அவதாரம் எடுக்கும் கலை இயக்குநர் முத்துராஜ்

post image
தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் நடிகர்களாகவும், ஸ்டண்ட் மாஸ்டர்கள் இயக்குநர்களாகவும், தனுஷ் போன்ற ஹீரோக்கள் இயக்குநர்களாகவும் மாறி வரும் சூழலில், இப்போது கலை இயக்குநர் ஒருவர், டைரக்டராக அவதாரம் எடுக்கிறார்.

இயக்குநர் ஷங்கரின் 'நண்பன்', 'இந்தியன் 2', அட்லியின் 'தெறி', 'பிகில்', 'மெர்சல்' 'ஜவான்', சிவகார்த்திகேயனின் 'அயலான்' உள்பட பல படங்களின் கலை இயக்குநரான அறியப்பட்டவர் டி. முத்துராஜ். இப்போது 'பேபி ஜான்', 'இந்தியன் 3', 'எல்.ஐ.கே', இளையராஜா பயோபிக் ஆகிய படங்களின் புரொடக்‌ஷன் டிசைனராகவும் இருந்து வருகிறார். விரைவில் இயக்குநராக புரொமோஷன் ஆகிறார் முத்துராஜ். இது குறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி..

அட்லியுடன்.

''கலை இயக்குநர்கள் இயக்குநர்களாக மாறுவது ஒன்றும் புதிதான விஷயமல்ல. ஹாலிவுட்டில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், நம் சினிமாவில் இயக்குநர்கள் பரதன், அடூர் கோபாலகிருஷ்ணன் இப்படி பல கலை இயக்குநர்களாக இருந்து இயக்குநர் ஆனவர்கள் தான். அந்த வகையில் முத்துராஜூம் இயக்குநர் ஆகிறார். சாபு சிரிலிடம் உதவியாளராக இருந்தவர். இயக்குநர்கள் ஷங்கர், அட்லீ இவர்களின் குட்புக்கில் இருப்பவர். படம் இயக்க வேண்டும் என்பது அவரது பல வருட கனவு என்கிறார்கள்.

ஷங்கருடன்..

அவர் குழந்தைகளுக்கான படமாக இயக்குகிறார். இப்போது அதற்கான ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளில் இறங்கியிருக்கிறார். அடுத்தாண்டு அதன் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள். 'காக்கா முட்டை'யில் சிறந்த குழந்தை நட்சத்திரங்கள் கிடைத்தது போல, முத்துராஜின் படத்திலும் சிறந்த நடிகர்கள் நிச்சயம் கிடைப்பார்கள்'' என்கிறார்கள்.

வெல்கம் `டைரக்டர்’ முத்துராஜ்.

Pushpa 2: ``Peelings பாடல்ல வர்றது நெடுநல்வாடை வரிகள் கிடையாது!'' - பாடலாசிரியர் விவேகா சொல்வதென்ன?

`புஷ்பா 2' படத்தின் பாடல்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் தமிழில் பாடலாசிரியர் விவேகா எழுதியிருக்கிறார். `புஷ்பா 1' படத்தின் பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் ... மேலும் பார்க்க

விடுதலை 2: ``8 நிமிஷம் குறைச்சிருக்கோம்'' - கடைசி நேரத்தில் வெற்றிமாறன் வெளியிட்ட வீடியோ

வெற்றிமாறம் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஶ்ரீ, மஞ்சு வாரியர், கௌதம் மேனன் ராஜிவ் மேனன், கிஷோர், சேத்தன், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கும் திரைப்படம் விடுதலை 2.நாளை (டிசம்பர் 20ம் தேதி) வ... மேலும் பார்க்க

`கலகலப்பு-க்கு பிறகும் கோதண்டராமனால் ஒரு ரவுண்ட் வர முடியாம போச்சு; ஏன்னா..!’ - உருகும் தளபதி தினேஷ்

சுந்தர்.சி.யின் 'கலகலப்பு' படத்தின் 'வெட்டுப்புலி' சந்தானத்தின் காமெடி கைத்தடிகளில் ஒருவராக கவனம் ஈர்த்தவர் கோதண்டராமன். ஸ்டண்ட் யூனியன் உறுப்பினராக இவரை திரையுலகில் 'பேய்' கிருஷ்ணன் என்று அழைப்பார்கள... மேலும் பார்க்க

`கலகலப்பு' நடிகர் கோதண்டராமன் காலமானார்!

ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன் இயற்கை எய்தியிருக்கிறார்.சென்னையைச் சேர்ந்த கோதண்டராமன் 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு வயது 65. ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமல்லாமல... மேலும் பார்க்க

Bala 25 : `நிறைய படங்கள் தமிழ் சினிமாவ கீழ கொண்டு போகுது; நீங்க வரணும் பாலா' - இயக்குநர் மணி ரத்னம்

இயக்குநர் பாலா, தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையும், அவரது 'வணங்கான்' பட இசை வெளியீட்டு விழாவையும் இணைந்து கொண்டாடும்படி நேற்று சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் 'பாலா 2... மேலும் பார்க்க

Bala 25 : `பொங்கலுக்கு அஜித் சார் படம் வருது; பாலா சாரின் வணங்கான் படமும் வருது' - சிவகார்த்திகேயன்

இயக்குநர் பாலா, தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையும், அவரது 'வணங்கான்' பட இசை வெளியீட்டு விழாவையும் இணைந்து கொண்டாடும்படி நேற்று சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் 'பாலா 2... மேலும் பார்க்க