``அவர் செய்த உதவியை நான் மறந்தா? எனக்கு சாப்பாடு கூட கிடைக்காது..'' - தனுஷ் குறித்து ரோபோ சங்கர்
பாஸ்ஸர் ஜே எல்வின் இயக்கத்தில், ரோபோ சங்கர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘அம்பி’.
இந்த படத்தில் அஸ்வினி சந்திரசேகர் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, ரமேஷ் கண்ணா, மோகன் வைத்யா உள்ளிட்ட சிலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
‘அம்பி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய ரோபோ சங்கர், “ சின்னத் திரையில் இருந்து நான் வெள்ளித்திரைக்கு போகும்போது ஒரு கலைஞனுக்கு ஒரு ஸ்பேஸ் கொடுக்க வேண்டும்.
‘மாரி’ படத்தில் அந்த ஸ்பேஸ் கிடைக்கவில்லை என்றால் வெள்ளி திரையில் எனக்கென்று ஒரு இடம் கிடைத்திருக்காது.
இந்தப் படத்திற்கு முன்பெல்லாம் ரோபோ சங்கர் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக வந்து நடித்துக்கொடுங்கள் என்பார்கள்.
நமக்கானத் தனித்துவத்தைக் காண்பிக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டிருக்கிறேன்.
ஆனால் மாரி படத்தில்தான் எனக்கு சரியான வாய்ப்பு கிடைத்தது. தனுஷ் சாரும் எனது வாழ்க்கையில் நிறைய உதவிகளைச் செய்திருக்கிறார்.

அவர் செய்த உதவியை மறந்தேன் என்றால் எனக்கு உணவு கூட கிடைக்காது. தனுஷ் சாருக்கு நான் செல்லப்பிள்ளை.
இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு உதவி செய்திருக்கிறார். இன்றைக்கு நான் சந்தோஷமாக இருப்பதற்கு அவரும் ஒரு காரணம். அவருக்கு என்னுடைய நன்றிகள்” என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...