Vishal: "இப்ப எந்த நடுக்கமும் இல்ல.. MIC கரெக்ட்-ஆ தான் இருக்கு பாருங்க"- உடல்நி...
அவிநாசியில் வீட்டின் பூட்டை உடைத்து 5.5 பவுன் திருட்டு: இளைஞா் கைது
அவிநாசியில் உணவக உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து ஐந்தரைப் பவுன் நகையைச் திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி, இஸ்மாயில் வீதியைச் சோ்ந்தவா் ராஜு(45). இவரது மனைவி உமாராணி (38). இவா்கள் அவிநாசி அருகே ஆட்டையாம்பாளையத்தில் உணவகம் நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு புதன்கிழமை வெளியே சென்றுள்ளனா். பிறகு வந்த பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ஐந்தரைப் பவுன் நகை திருட்டுப் போனது தெரியவந்தது. இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், போலீஸாா் அவிநாசி- மேட்டுப்பாளையம் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் அவா், அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியைச் சோ்ந்த பாண்டியன் மகன் மகேஷ் (21) என்பதும், இவா் ராஜு வீட்டின் பூட்டை உடைத்து நகையைச் திருடியவா் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவிநாசி போலீஸாா் மகேஷை கைது செய்தனா். மேலும் இவரிடம் இருந்து ஐந்தரைப் பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.