கும்பகோணம்: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை... போக்சோவில் பேராசிரியர் கைது!
அவிநாசி அருகே கார் - லாரி மோதல்! பனியன் கம்பெனி நிறுவனர் பலி! இரு மகன்கள் படுகாயம்
அவிநாசி: அவிநாசி அருகே மங்கலம் சாலையில் கார், லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் சம்பவ இடத்தில் பலியானார். மேலும் இரு சிறுவர்கள் பலத்த காயமடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தேவம்பாளையத்தில் வசித்து வருபவர் சங்கர்(40). இவர் தனது இரு மகன்களை அழைத்துக் கொண்டு வஞ்சிபாளையத்திலிருந்து, அவிநாசி நோக்கிக் காரில் சென்றுள்ளார்.
இதையும் படிக்க : 2024 - பாஜகவுக்கு ரூ. 2,244 கோடி நன்கொடை! காங்கிரஸுக்கு ரூ. 289 கோடி!!
அவிநாசி - மங்கலம் சாலையில் வெங்கமேடு அருகே சென்று கொண்டிருந்தபோது, அவிநாசியில் இருந்து மங்கலம் நோக்கி வந்த லாரியும், காரும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பலத்த காயமடைந்த இரு குழந்தைகளும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.