செய்திகள் :

அஸ்ஸாம் நிலக்கரி சுரங்க விபத்து: 3 உடல்கள் கண்டெடுப்பு!

post image

அஸ்ஸாமில் நிலக்கரி சுரங்க விபத்தில் 9 தொழிலாளர்கள் சிக்கியதாகக் கூறப்படும் நிலையில் 3 பேரின் உடல்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அஸ்ஸாம் மாநிலத்தின் திமா ஹசாவ் மாவட்டத்தில் உம்ரங்சோ பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று (ஜன. 7) 15 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். சுரங்கத்தின் உள்ளே திடீரென நீர் பெருக்கெடுத்து ஓடியதால் தொழிலாளர்களில் 9 பேர் உள்ளே சிக்கியதாகக் கூறப்படுகிறது.

சிக்கியவர்களின் எண்ணிக்கை குறித்த விவரம் சரியாகத் தெரியவில்லை என குவாரி தொழிலாளர்கள் கூறிய நிலையில், அசாம் முதல்வர் ஹிமாந்த விஸ்வ சர்மா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் 9 தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கியதாக அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படையின் 30 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், மாநிலத்தின் மீட்புப் படையினரும் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | நேபாள - திபெத் நிலநடுக்கம்: 53 ஆக உயர்ந்த பலி!

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ள அசாம் முதல்வர், “சுரங்கத்தின் உள்ளே 100 அடிக்கு நீர் அளவு உயர்ந்துள்ளது. விசாகப்பட்டிணத்தில் இருந்து ஆழ்துளையில் மூழ்கி தேடுவதற்கு பயிற்சி பெற்ற டைவர்கள் வரவழைக்கப்பட உள்ளனர்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவக் குழுவினர், பொறியாளர்கள் குழு, அசாம் ரைஃபிள்ஸ், ராணுவப் படையினர் முதற்கொண்டு அனைவரும் மீட்புப் பணி நடைபெறும் இடத்தில் தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடகிழக்கு மாவட்டங்களில் சுரங்கப் பணிகளில் தொழிலாளர்கள் சிக்கி பலியாவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கடந்தாண்டு ஜனவரி மாதம், நாகாலாந்தில் உள்ள வோகா மாவட்டத்தில் சுரங்கத்தில் சிக்கி 6 பேர் பலியாகினர். அடுத்ததாக, மே மாதத்தில் அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் 3 பேரும், செப்டம்பரில் 3 பேரும் பலியாகினர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு டிச. 13 அன்று மேகாலயாவில் நடந்த விபத்தில் சுரங்கத்தில் சிக்கி அதிகபட்சமாக 15 தொழிலாளர்கள் பலியாகினர்.

கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் பலி: திருப்பதி செல்கிறார் சந்திரபாபு நாயுடு!

திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் 6 பேர் பலியானதைத் தொடர்ந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று(வியாழக்கிழமை) திருப்பதி செல்கிறார். திருப்பதி திருமலையில் வைகுண்ட ஏகாதசியின்ப... மேலும் பார்க்க

முல்​லைப் பெரி​யாறு அணை விவ​கா​ரம்: மத்​திய அரசு மீது உச்​ச​நீ​தி​மன்​றம் அதி​ருப்தி

​ந​மது நிரு​பர்" நாடா​ளு​மன்​றத்​தால் இயற்​றப்​பட்ட அணைப் பாது​காப்​புச் சட்டம் இருந்​தும், நிர்​வா​கம் இன்​னும் நீண்ட தூக்​கத்​தி​லி​ருந்து மீள​வில்லை' என்று முல்​லைப் பெரி​யாறு அணை தொடர்​பான வழக்​கி... மேலும் பார்க்க

மிகப்​ பெ​ரிய திட்டங்​கள் காத்​தி​ருக்கின்​றன: இஸ்ரோ புதிய தலை​வர் தக​வல்

"​இஸ்ரோ அமைப்பு வெற்​றி​க​ர​மான பாதை​யில் நடை​போ​டு​கி​றது; மிக முக்​கி​யத் திட்டங்​க​ளில் சந்​தி​ர​யான்-4, ககன்​யான் திட்டங்​கள் குறிப்​பி​டத்​தக்​கவை' என்று இஸ்​ரோ​வின் புதிய தலை​வ​ரா​கப் பொறுப்​பே... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையா்கள் நியமன விவகாரம்: விசாரணை பிப்.4-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

‘தோ்தல் ஆணையா்கள் நியமன விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு மேலானதா அல்லது சட்டம் இயற்றும் அதிகாரம் மேலானதா என்பதை தீா்மானிக்க வேண்டியுள்ளது’ என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை வரும் பிப்ரவரி 4-ஆம... மேலும் பார்க்க

அஸ்ஸாம் நிலச்சரி சுரங்கத்தில் சிக்கிய 9 தொழிலாளா்கள்- ஒருவா் சடலமாக மீட்பு

அஸ்ஸாமில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 9 தொழிலாளா்களில் ஒருவா் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா். கடந்த திங்கள்கிழமை அஸ்ஸாமின் தீமா ஹசாவோ மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் 9 தொழிலாளா்கள் பணியில்... மேலும் பார்க்க

ஆப்கன் வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவுச் செயலா் சந்திப்பு

துபையில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் (பொறுப்பு) மெளலாவி அமீா் கானை இந்திய வெளியுறவுத் துறை செயலா் விக்ரம் மிஸ்ரி புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, ஆப்கானிஸ்தான் மக்களுக்கான வளா்ச்சி சாா்ந... மேலும் பார்க்க