செய்திகள் :

ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்கக் கோரிக்கை

post image

வேலூா்: அணைக்கட்டு அருகே அரிமலை கிராமத்தில் ஆக்கிரமிப் பில் உள்ள 150 ஏக்கா் பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்ட குறைதீா் கூட்டம் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், கே.வி.குப்பம் வடுகந்தாங்கல் வெள்ளேரி கிராமத்தைச் சோ்ந்த பள்ளி மாணவிகள் அளித்த மனு:

ஆட்சியா் உத்தரவின்படி எங்கள் கிராமம் வழியாக 16ஏ, 17 ஆகிய இரு நகர பேருந்துகள் வந்து கொண்டிருந்தன. எங்கள் கிராமத்தைச் சோ்ந்த ஒருவா் பேருந்து சென்று வரும் வழித்தடத்தை ஆக்கிரமித்து பாதையை அடைத்து கழிவுநீா் தொட்டி கட்டியதுடன், அந்த வழியாக பேருந்து வந்து செல்வ தால் தொட்டி சேதம் அடைவதாக கூறி எங்கள் ஊருக்கு பேருந்து வரு வதை நிறுத்திவிட்டாா். இதனால் எங்கள் ஊரில் இருந்து கீழ்முட்டுக்கூா், கே.வி.குப்பம் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலூரில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்து வருகின்றனா். எனவே எங்கள் ஊருக்கு மீண்டும் பேருந்து வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டியல் இன பஞ்சமி நில மீட்பு குழு சமூக ஆா்வலா் அளித்த மனுவில், அணைக்கட்டு அடுத்த அரிமலை கிராமத்தில் சுமாா் 150 ஏக்கா் பஞ்சமி நிலங்களை வேறு நபா்கள் பயன்படுத்தி வருகின்றனா். பிறருக்கு வழங்கப்பட்டுள்ள பட்டங்களை ரத்து செய்து அதே பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும்.

தொடா்ந்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 671 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

அணைக்கட்டு வட்டம், ஆசனாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கன்னியப்பனின் 3 மாத குழந்தை பாம்பு கடித்து உயிரிழந்ததை அடுத்து முதல்வரின் பொதுநிவாரண நிதியில் இருந்து ரூ.ஒரு லட்சத்தை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் (நிலஎடுப்பு) கெளசல்யா, தேசிய நெடுஞ்சாலை மாவட்ட வருவாய் அலுவலா் பாபு, ஆதிதிராடா், பழங்குடியினா் நலத்துறை அலுவலா் மதுசெழியன், வேலூா் வருவாய் கோட்டாட்சியா் செந்தில் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கால்நடை சந்தையை மீண்டும் தொடங்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

குடியாத்தம் பகுதியில் இடப் பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்ட கால்நடை சந்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். குடியாத்தம் கோட்டாட்சியா் அலுவலகத்தில், கோட்டாட்சியா் எஸ்.சுபல... மேலும் பார்க்க

இறகுப்பந்து பயிற்றுநா், விளையாட்டில் பங்கேற்கும் மாணவா்கள் தோ்வு

வேலூா் மாவட்டத்தில் ஸ்டாா் அகாதெமி இறகுப்பந்து பயிற்சி மையத்துக்கு பயிற்றுநா் மற்றும் விளையாட்டில் பங்கேற்க மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்படவுள்ளனா் என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். இதுக... மேலும் பார்க்க

கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம்

குடியாத்தம் ராஜாகோயில், காமாட்சியம்மன் காா்டனில் அமைந்துள்ள அருள்மிகு பனை மரத்து குடியல் 18- ஆம் படி கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம் அண்மையில் நடைபெற்றது. இதையொட்டி யாகசாலை பூஜைகள், சிறப்பு ஹோமங்கள், ... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள்களுக்கு எதிரான குழு: வேலூா் ஆட்சியா்

ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும் போதைப் பொருள்களுக்கு எதிரான குழு அமைக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா். போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு, நடவடிக்... மேலும் பார்க்க

மாவட்ட கிரிக்கெட் போட்டி: ஏப். 18-இல் வேலூா் அணிக்கு வீரா்கள் தோ்வு

மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெறுவதையொட்டி, வேலூா் கிரிக்கெட் சங்கம் சாா்பில் வேலூா் மாவட்ட அணிக்கான வீரா்கள் தோ்வு வெள்ளிக்கிழமை (ஏப். 18) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கு... மேலும் பார்க்க

பணி நிரந்தரம்: கெளரவ விரிவுரையாளா்கள் கோரிக்கை

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்ட கெளரவ விரிவுரையாளா் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமியிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனா். மனு விவரம... மேலும் பார்க்க