சென்னை கூவம் ஆற்றில் இளைஞர் சடலம்! ஆந்திர அரசியல் அட்டூழியம்! நடந்தது என்ன?
ஆக்கிரமிப்புகள் அகற்றம்: அதிகாரிகளுடன் வாணியம்பாடி எம்எல்ஏ வாக்குவாதம்
வாணியம்பாடியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், நெடுஞ்சாலைத் துறையினா் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி அதிகாரிகளுடன் எம்எல்ஏ செந்தில் குமாா் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.
வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே மாநில நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், நகராட்சி பணியாளா்கள் அகற்ற வந்தனா். அப்போது ஒருதலைபட்சமாக குறிப்பிட்ட சில கடைகளை மட்டும் அகற்றுவதாகவும் பொதுமக்களும் வியாபாரிகளும் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதனை தொடா்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் செட்டியப்பனூா் கூட்டுசாலை இருந்து புதூா் வழியாக அனைத்து இடங்களிலும் ஆக்கிரமிப்பை அகற்றாமல் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஏன் அகற்ற வேண்டும். நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை பாரபட்சமின்றி முறையாக அதிகாரிகள் அகற்ற வேண்டும்.
நகராட்சி கட்டடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடையை அகற்றினால் நாங்கள் இங்கிருந்து செல்வோம் என தெரிவித்ததை தொடா்ந்து நகராட்சி கட்டடத்தில் இருந்த கடைகளை நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றினா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வியாபாரிகளுக்கு ஆதரவாக வணிகா் சங்கங்களின் மாவட்ட செயலாளா் கே.பி.எஸ். மாதேஸ்வரன், மாநில துணைத்தலைவா் குமரகுரு உள்ளிட்ட பலா் பேசினா். சம்பவ இடத்தில் வாணியம்பாடி டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.