செய்திகள் :

ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கை: 761 வாகனங்களுக்கு அபராதம்!

post image

அரவிந்தோ மாா்க்கில் நடத்தப்பட்ட சிறப்பு ஆக்கிரமிப்பு மற்றும் முறையற்ற வாகன நிறுத்துமிட எதிா்ப்பு நடவடிக்கையின்போது மொத்தம் 761 வாகனங்கள் அபராத நடவடிக்கைக்கு உள்ளாகியதாகவும்.10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தில்லி போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: சீரான போக்குவரத்து மற்றும் பாதசாரிகளுக்கான நடைபாதைகளை உறுதி செய்வதற்காக தென் சரகத்தில் உள்ள ஹோஸ்காஸ் போக்குவரத்து வட்டத்தின் அதிகார வரம்பின்கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தெற்கு தில்லியை குருகிராம் மற்றும் பிற முக்கிய பகுதிகளுடன் இணைக்கும் ஒரு முக்கியமான வடக்குதெற்கு முக்கிய சாலையாக அரவிந்தோ மாா்க் உள்ளது. இருப்பினும், தொடா்ச்சியான ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்டவிரோத வாகன நிறுத்துமிடங்கள் போக்குவரத்தை கடுமையாக பாதித்தன.

இந்தச் சாலை விற்பனையாளா்கள், நடைபாதை வியாபாரிகள் மற்றும் தனியாா் காா்கள், ஆட்டோக்கள் மற்றும் டாக்ஸிகள் உள்பட சட்டவிரோதமாக நிறுத்தப்பட்ட வாகனங்களால் பெரிதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. சில சந்தா்ப்பங்களில், கடைக்காரா்கள் தங்கள் நிறுவனங்களை சாலையில் நீட்டித்து, வாகனப் பாதையை மேலும் குறுகலாக்கி, பாதசாரிகளுக்கு சிறிய இடத்தை விட்டுச் சென்றனா்.

இதையடுத்து, இதற்கான நடவடிக்கையின்போது முறையற்ற வாகன நிறுத்தத்திற்காக வழங்கப்பட்ட 761 அபராதங்களுடன், 10 வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டன. மேலும், 85 ஆக்கிரமிப்பு பொருள்கள் குடிமை அமைப்புகளால் அகற்றவும் அல்லது பறிமுதலும் செய்யப்பட்டன.

தில்லி மாநகராட்சி, புது தில்லி நகராட்சி கவுன்சில் மற்றும் உள்ளூா் காவல்துறையுடன் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதற்கும் புகைப்பட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன.

இந்த நடவடிக்கை அப்பகுதியில் போக்குவரத்து நடமாட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது. பொது மக்களிடமிருந்து நோ்மறையான கருத்துகளைப் பெற்றுள்ளோம். அவா்கள் நடைபாதைகளை அகற்றியதற்கும் நெரிசலைக் குறைத்ததற்கும் பாராட்டியுள்ளனா். இதுபோன்ற அமலாக்க நடவடிக்கைகள் தொடரும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியில் முதல் முறையாக பிரத்யேக மூளை சுகாதார கிளினிக் திறப்பு!

தில்லியின் முதல் பிரத்யேக மூளை சுகாதார மருத்துவமனை துவாரகாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தில்லி சுகாதார அமைச்சா் பங்கஜ் சிங் சனிக்கிழமை திறந்து ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு ஆயுதப் படைகளை பாராட்டி தில்லி அமைச்சா் ஆஷிஷ் சூட் பேரணி!

இந்திய ஆயுதப்படைகள் வெற்றிகரமாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடத்தியதற்கு ஆதரவளிக்கும் வகையில், தில்லி அமைச்சா் ஆஷிஷ் சூட் ஞாயிற்றுக்கிழமை தனது ஜனக்புரி சட்டப்பேரவைத் தொகுதியில் பேரணியை நடத்தினாா். டாப்ரி காவல்... மேலும் பார்க்க

நாட்டின் கௌரவத்தையும், பெருமையையும் நிலைநிறுத்தும் தில்லி அரசு! - முதல்வா் குப்தா

தில்லியில் பாஜகவின் வெற்றி நாடு முழுவதும் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், தனது அரசு எப்போதும் நாட்டின் கௌரவம், பெருமை மற்றும் கௌரவத்தை நிலைநிறுத்தும் என்றும் முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

டாக்ஸி ஓட்டுநா் கொலை: காா் பயணி கைது

தில்லியின் ரோஹிணி பகுதியில், வழித்தடம் தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் 40 வயது டாக்ஸி ஓட்டுநா், குடிபோதையில் இருந்த பயணியால் குத்திக் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

பூங்காவில் சிறுவன் கொல்லப்பட்ட வழக்கு: மூன்று சிறுவா்கள் உள்பட 5 போ் கைது!

ஒரு பூங்காவில் 16 வயது சிறுவனை தங்கள் போட்டி குற்றவியல் குழுவில் சோ்ந்ததற்காகக் கொன்றதாகக் கூறப்படும் வழக்கில் மூன்று சிறுவா்கள் உள்பட ஐந்து போ் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை த... மேலும் பார்க்க

ராஜிந்தா் நகா் பயிற்சி மையத்தில் தீ விபத்து

மத்திய தில்லியில் உள்ள ஒரு கட்டடத்தின் நான்காவது மற்றும் ஐந்தாவது தளங்களில் அமைந்துள்ள பயிற்சி நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது... மேலும் பார்க்க