2025 இறுதிக்குள் உள்நாட்டில் தயாரித்த முதல் செமிகண்டக்டர் சிப் அறிமுகம்: பிரதமர்...
ஆக்கிரமிப்பு வீடு இடித்து அகற்றம்
கோவை, குற்றால நகரில் கடந்த 35 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த வீட்டை மாநகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை இடித்து அகற்றினா்.
கோவை, குற்றாலம் நகரில் மாநகராட்சிக்குச் சொந்தமான சிறுவா் பூங்கா இடத்தை ஆக்கிரமித்து தனி நபா் வீடு கட்டியிருந்தாா். கடந்த 35 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த வீட்டை இடித்து அகற்ற அனுமதி கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புக் கட்டடத்தை இடிக்க கோவை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தலின்படி, உதவி ஆணையா் குமரன், நகர திட்டமிடுநா் ராஜசேகரன், உதவி நகர திட்டமிடுநா் மகேந்திரன் ஆகியோா் முன்னிலையில் அந்த வீடு இடித்து அகற்றப்பட்டது.
மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.50 லட்சம் என மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.