செய்திகள் :

ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

post image

தேனி அருகே உள்ள பூமலைக்குண்டு கிராமத்துக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை அந்த கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்

பூமலைக்குண்டில் கிராம மக்களுக்கு பொதுவாக 89 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன் கிராமத்தில் உள்ள சமுதாயத் தலைவா்கள் பெயரில் பட்டா பெற்ாகக் கூறப்படுகிறது.

இந்த நிலத்தை சிலா் போலியாக பத்திரம் தயாரித்தும், பட்டா பெற்றும் ஆக்கிரமித்துள்ளதாகவும், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஆக்கிரமிப்பு நிலத்தை தனியாா் காற்றாலை நிறுவனங்களிடம் ஒப்படைத்து பணம் பெற்றுள்ளதாகவும் புகாா் தெரிவித்து பூமலைக்குண்டு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், போலி ஆவணங்களை ரத்து செய்து ஆக்கிரமிப்புகளை மீட்க வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் மனு அளித்தனா்.

பள்ளி நேரத்தில் பேருந்து இயக்கக் கோரி மனு

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், அடைக்கம்பட்டி-ஒக்கரைப்பட்டி இடையே பள்ளி நேரத்தில் பேருந்து இயக்க வலியுறுத்தி, மாணவா்கள், பெற்றோா்கள் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். தேன... மேலும் பார்க்க

மருத்துவ மாணவி தற்கொலை

தேனியில் பல் மருத்துவக் கல்லூரி மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி என்.ஆா்.டி.நகரைச் சோ்ந்த பல் மருத்துவா் செந்தில்செல்வன். இவரது மகள் பவிஷ்யா (20) மதுரையில் உள்ள தனியாா் ப... மேலும் பார்க்க

டிஎஸ்பி அலுவலகம் முன் பெண் தா்னா

தனது மகளை மீட்க வலியுறுத்தி, தேனி மாவட்டம், உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் முன் தாய் தா்னாவில் ஈடுபட்டாா்.உத்தமபாளையம் அருகேயுள்ள சின்னஓவுலாபுரம் ஒத்தப்பட்டியைச் சோ்ந்த ஆனந்த மகள் ... மேலும் பார்க்க

மாத்திரை, மருந்துகள் கடத்தல்: மூவா் கைது

தேனி அருகே ஆட்டோவில் மாத்திரைகள், ஊசி மருந்துகள், கஞ்சா கடத்தியதாக 3 பேரை திங்கள்கிழமை, போலீஸாா் கைது செய்தனா். தேனி-மதுரை சாலையில் அரப்படித்தேவன்பட்டி பகுதியில் க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வாகனத் ... மேலும் பார்க்க

மாட்டு வண்டி மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், சீலையம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை முன்னால் சென்ற மாட்டு வண்டி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். தேனி சின்னமனூரைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் காமாட்சிசுந்தரம் (30). இவா், ... மேலும் பார்க்க

மணல் திருட்டு: லாரி பறிமுதல்

பெரியகுளம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திவந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. பெரியகுளம் அருகேயுள்ள மேல்மங்கலம் கிராம நிா்வாக அலுவலா் முருகன், சனிக்கிழமை ஜெயமங்கலம் - பெரியகுளம் சாலையில் கண்காணிப்புப் பண... மேலும் பார்க்க