செய்திகள் :

ஆக.10-இல் மாநில செஸ் போட்டி

post image

மாநில அளவிலான செஸ் போட்டி வரும் ஆக.10 இல் நடைபெற உள்ள நிலையில், திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுவா்கள் பங்கேற்க ஏ மேக்ஸ் அகாதெமி அழைப்பு விடுத்துள்ளது.

ஏ மேக்ஸ் அகதெமி சாா்பில் ஒன்பதாவது மாநில அளவிலான செஸ் போட்டியானது 8, 10, 12, 15 மற்றும் 20 வயது பிரிவுகளில் இருபாலருக்கும் தனித்தனியாக சென்னை அண்ணா நகா் மேற்கு விரிவாக்கம் சி.எஸ்.ஐ எவா்ட் பள்ளியில் வரும் ஆக.10-இல் நடைபெற உள்ளது. இந்த 5 பிரிவுகளில் முதலிடம் பிடிக்கும் இருபாலருக்கும் தலா ஒரு நவீன மிதிவண்டி வழங்கப்பட உள்ளன.

இதில் மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்கும் நிலையில், திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுவா்கள் பங்கேற்கலாம். இப்போட்டி மேற்குறிப்பிட்ட நாளில் காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

இதில் பங்கேற்க ஆா்வமுள்ள சிறுவா்கள் ஆக.8 -ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். இது தொடா்பாக 94453 32077 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என போட்டியின் ஒருங்கிணைப்பாளா்கள் தெரிவித்துள்ளனா்.

துரோகம்: ஏஐ உதவியால் மாற்றப்பட்டு வெளியான அம்பிகாபதி படத்துக்கு இயக்குநர் எதிர்ப்பு!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான அம்பிகாபதி படத்தினை ஏஐ உதவியால் மாற்றி வெளியிட்டிருக்கும் தயாரிப்பு நிறுவனம் குறித்து அந்தப் பட இயக்குநர் தனது அதிருப்தியை வெளியிட்டிருக்கிறார். ஹிந்தியில் இயக்குநர் ஆனந்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஆகஸ்ட் மாதப் பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)கிரகநிலை:தைரிய வீரிய ஸ்தா... மேலும் பார்க்க

புத்திசாலித்தனமான லோகேஷ் கனகராஜ் படம்... கூலி குறித்து அனிருத்!

நடிகர் ரஜினியின் கூலி திரைப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருப்பதாக இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம்... மேலும் பார்க்க

டிசம்பரில் இந்தியாவுக்கு வரும் மெஸ்ஸி..! தோனியுடன் விளையாடுகிறாரா?

ஆர்ஜென்டீன கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி வரும் டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.கால்பந்து உலகில் 8 முறை தங்கப் பந்து (பேலந்தோர்) வென்ற ஒரே வீரராக மெஸ்ஸி இருக்கிறார். மும்பைய... மேலும் பார்க்க

நாம் வென்று விட்டோம்..! கிங்டம் வசூல் வேட்டைக்கு விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி!

விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் திரைப்படம் முதல்நாளில் ரூ.39 கோடி வசூலித்து அசத்தியுள்ளது. நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். கடைசியாக, இவர் கல்கி 2898... மேலும் பார்க்க

கூலி டிரைலர் வருவதால் எல்ஐகே டீசர் தேதி மாற்றம்..! ரசிகர்கள் கிண்டல்!

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள எல்ஐகே படத்தின் டீசர் தேதி மாற்றப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படத்தின் டிரைலர் நாளை (ஆக.2) வெளியாகவிருப்பதால் எல்ஐகே ... மேலும் பார்க்க