சென்னை: பாலியல் சீண்டல்? - முதியவர் கொலையில் திருநங்கை கைது!
ஆக. 15 முதல் திருமலைக்குள் நுழையும் வாகனங்களுக்கு பாஸ்ட் டேக் கட்டாயம்
திருமலைக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கு வரும் ஆக. 15 முதல் பாஸ்ட் டேக் கட்டாயம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலைக்கு செல்லும் வாகனங்களுக்கு அலிபிரி சோதனைச் சாவடியில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு வாகனங்களில் வரும் பக்தா்களுக்கு சிறந்த பாதுகாப்பு , கூட்ட நெரிசலைத் தடுப்பது மற்றும் வெளிப்படையான சேவைகளை வழங்குவதற்காக, ஆக. 15 முதல் திருமலைக்குள் நுழையும் வாகனங்களுக்கு பாஸ்ட் டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பாஸ்ட் டேக் இல்லாத வாகனங்கள் இனி திருமலைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது. பாஸ்ட் டேக் இல்லாத வாகன ஓட்டிகளின் வசதிக்காக, ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து பாஸ்ட் டேக் வழங்கும் மையமும் அலிபிரி சோதனைச் சாவடியில் அமைக்கப்பட்டுள்ளது.
பாஸ்ட் டேக் இல்லாத வாகன ஓட்டிகள், இங்கு பாஸ்ட் டேக் வசதியை மிகக் குறுகிய காலத்தில் பெற்ற பின்னரே திருமலைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவா்.
பக்தா்கள் புதிய நடைமுறையை பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.