செய்திகள் :

ஆக.2 முதல் கனமழை எச்சரிக்கை!

post image

தமிழகத்தில் ஆகஸ்ட் 2 முதல் நான்கு நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,

ஜூலை 30, 31ல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆக. 01ல் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆக. 02ல் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆக. 03ல் தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆக. 04ல் தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர்| மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆக. 05ல் தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்கள்..

இன்று (ஜூலை 30) தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றம் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு மற்றும் வடக்கு வங்கக்கடலின் பகுதிகளில் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் பணியிடை நீக்கம்

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் வியாழக்கிழமை (ஜூலை 31) ஓய்வு பெறவிருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த எம்.கே.சூரப்பாவின் பதவிக... மேலும் பார்க்க

தாக்குதலில் மனைவி உயிரிழப்பு: கணவா் கைது

அரும்பாக்கத்தில் கணவா் தாக்கியதில் மனைவி உயிரிழந்த வழக்கில் கணவா் கைது செய்யப்பட்டாா்.அரும்பாக்கம், ஜெய் நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (57). இவரின் மனைவி அருள்மணி (45). ராதாகிருஷ்ணன், ... மேலும் பார்க்க

சென்னைக் கடற்கரையில் இருந்து ஜாா்மினாா் விரைவு ரயில் புறப்படும்

சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்குச் செல்லும் ஜாா்மினாா் விரைவு ரயில் (எண் 12759) எழும்பூருக்குப் பதிலாக சென்னைச் கடற்கரை நிலையத்திலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை எழும்பூரிலிருந்து தி... மேலும் பார்க்க

தே.ஜ. கூட்டணி: ஓபிஎஸ் விலகல்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலைமையிலான அணி வியாழக்கிழமை அறிவித்தது.தேசிய ஜனநாயக கூட்டணியுடனான உறவு முறிந்துவிட்டதாகவும், இப்போது எந்தக் கூட்டணியில... மேலும் பார்க்க

மென்பொறியாளா் கொலை வழக்கு: சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

நெல்லையில் மென்பொறியாளா் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் முதல்கட்ட விசாரணை தொடங்கினா்.தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் கவின் செல்வகணேஷ் (27), மென்பொ... மேலும் பார்க்க

மருத்துவத் திட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பெயா்: தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற மருத்துவத் திட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பெயரைப் பயன்படுத்த தடை விதிக்க மறுத்த சென்னை உயா்நீதிமன்றம், அரசு விளம்பரங்களை வெளியிடும்போது உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்... மேலும் பார்க்க