செய்திகள் :

ஆக.26 இல் பிரதமர் மோடி தமிழக வருகை ரத்து

post image

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 26 இல் தமிழகம் வருவதாக இருந்த நிலையில், அரது பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, புனரமைக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்ததுடன், பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் தரிசனம் செய்து, தமிழகத்தில் சோழர்களுக்கு சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இதையடுத்து ஆகஸ்ட் 26 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வரவிருப்பதாக தகவல்கள் வெளியானது. தமிழகம் வரும் மோடி, திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய இருப்தாக கூறப்பட்டது.

மேலும், சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்தபடி, நாட்டு மக்களுக்கு மனதின் குரல் நிகழ்ச்சியில் நேரலையில் மோடி உரையாற்ற இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், ஆகஸ்ட் 26 இல் தமிழகம் வருவதாக இருந்த பிரதமர் நரேந்திர மோடியின் பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால், திருவண்ணாமலை, சிதம்பரம் கோயிலிலுக்கு வருவதாக இருந்த மோடி பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாற்றப் பணி இருப்பதால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அக்டோபர் முதல் வாரத்தில் மோடி தமிழகம் வர திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... எஸ்பிஐ வங்கியில் 5,180 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

Prime Minister Narendra Modi was scheduled to visit Tamil Nadu on August 26, but reports have emerged that his visit has been canceled.

விஜய் தராதரம் அவ்வளவுதான்: அமைச்சர் கே.என். நேரு பதிலடி!

திருச்சி: நேற்று அரசியலுக்கு வந்த விஜய், ஒரு மாநிலத்தின் முதல்வரை, மாபெரும் இயக்கத்தின் தலைவரை, நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பொது வாழ்வில் ஈடுபட்டு வருபவரை நாகரிகமன்றி பேசியிருப்பது அவமரியாதைக்குரியது, இ... மேலும் பார்க்க

போக்குவரத்து நெரிசல்: சென்னையிலிருந்து தாமதமாகப் புறப்பட்ட விமானங்கள்!

பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளில் போக்குவரத்து நெரிசலால் சென்னையிலிருந்து 10-க்கும் மேற்ப்பட்ட விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன.சென்னை பல்லாவரம் மேம்பாலத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை தனியார் கல்லூரி... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம் 120 அடியாக நீடிப்பு

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை வினாடிக்கு 30,850 கன அடியாக நீடிக்கும் நிலையில், அணையின் நீர்மட்டம் 3-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின... மேலும் பார்க்க

இன்று தமிழகம் வருகிறார் அமித் ஷா: நெல்லையில் பலத்த பாதுகாப்பு

திருநெல்வேலியில் நடைபெறும் 5 மாவட்டங்களுக்குள்பட்ட 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை(ஆக.22) தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் ... மேலும் பார்க்க

பல்லாவரம்,குரோம்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

சென்னை பல்லாவரம் மேம்பாலத் தடுப்பில் மோதிய கல்லூரி பேருந்தால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை பல்லாவரம் மேம்பாலத் தடுப்பில் தனியார் கல்லூரி பேருந்து ஒன்று மோதிய... மேலும் பார்க்க

ஆட்சியை பிடித்து விடலாம் என கனவு காண்கிறார் விஜய்: ஆா்.பி.உதயகுமாா்

ஆட்சியை பிடித்து விடலாம் என கனவு காணும் விஜய், தான் மட்டுமே தமிழ்நாட்டை காக்க பிறந்த அவதார புருஷர்போல அவரது பேச்சு இருந்தால், அதை மக்களே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என தமிழக எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆ... மேலும் பார்க்க