செய்திகள் :

ஆங்கிலப் புத்தாண்டு: திருச்செந்தூரில் பக்தர்கள் சுவாமி தரிசனம்!

post image

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி புதன்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து உதயமார்த்தாண்ட தீபாராதனை, திருப்பள்ளி எழுச்சி, கால சந்தி தீபாராதனை, உள்ளிட்ட பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்.

ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் செவ்வாய்கிழமை இரவு முதலே வரிசையில் காத்திருந்து, கோயில் நடைதிறந்தவுடன் சுவாமியை தரிசனம் செய்தனர்.

புதன்கிழமை அதிகாலை முதல் கடலில் புனித நீராடியும், அங்கப்பிரதட்சணம் எடுத்தும் ஏராளமான பக்தர்கள் ரூ.100 கட்டணம் மற்றும் இலவச பொது தரிசனப்பாதையில் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்தனர்.

ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் சு.ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

ஆளுநர் திடீரென வெளியேறியது ஏன்? வெளியான விளக்கம்

பேரவையிலிருந்து ஆளுநர் வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை திங்கள்கிழமை (ஜன. 6) கூடியது. புத்தாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் ஆளுநா் உரையுடன் கூட்டம் தொடங்குவ... மேலும் பார்க்க

உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி

உரையை வாசிக்காமலேயே சட்டப்பேரவையிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். தமிழக சட்டப்பேரவை திங்கள்கிழமை (ஜன. 6) கூடுகிறது. புத்தாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் ஆளுநா் உரையுடன் கூட்டம் தொடங்குவத... மேலும் பார்க்க

அதிமுக எம்எல்ஏக்களுடன், எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

அதிமுக எம்எல்ஏக்களுடன் கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தொடரில் எழுப்பப்பட உள்ள பிரச்னைகள் குறித்து எம்எல்ஏக்களுக்கு சில அறிவுறுத்தல்களை அவர் வழங்கியிர... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்மட்டம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.87 அடியாக குறைந்துள்ளது.திங்கள்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.52 அடியில் இருந்து 117.87 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1307 கனஅட... மேலும் பார்க்க

குளிா்கால தொற்று பரவும் இடங்களில் மருத்துவ முகாம்கள்

குளிா் காலங்களில் ஏற்படும் நோய்களைத் தடுக்க தேவையான இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். அதன்படி,... மேலும் பார்க்க

திமுக கூட்டணி கட்சிகள் பிரிந்து செல்லும்: தமிழிசை சௌந்தரராஜன்

தமிழகத்தில் 2026 தோ்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பிரிந்து செல்லும் என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா். சென்னை பெருங்குடி வேம்புலி அம்மன் கோயிலில் பாஜக சாா்பில் பொங்க... மேலும் பார்க்க