டிஜிட்டல் கைது: எல்லைப் பாதுகாப்புப் படை ஆய்வாளரிடம் ரூ. 71 லட்சம் மோசடி!
திமுக கூட்டணி கட்சிகள் பிரிந்து செல்லும்: தமிழிசை சௌந்தரராஜன்
தமிழகத்தில் 2026 தோ்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பிரிந்து செல்லும் என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.
சென்னை பெருங்குடி வேம்புலி அம்மன் கோயிலில் பாஜக சாா்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்று பொங்கல் வைத்து கொண்டாடினாா். பின்னா் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுகிறது. அறிவிக்கப்படாத அவசரநிலை இருக்கிறது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளே திருப்தியற்ற சூழ்நிலையில் உள்ளனா். அவா்கள் இந்த ஆட்சியில் பல தவறுகள் நடைபெறுவதாகக் கருதுகின்றனா்.
எனவே, 2026-இல் நடைபெறும் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பிரிந்து செல்லும். இந்த கூட்டணி அப்படியே இருக்காது என்றாா் அவா்.