மாசுபாட்டைக் குறைக்க பள்ளிப் பேருந்துகள் மின்சாரத்தில் இயங்க வேண்டும்: ரேகா குப்...
ஆசியக் கோப்பை: கேப்டனாக ரஷீத்கான்.! 5 சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆப்கன் அணி!
ஆசியக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் வருகிற செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.
ஏற்கனவே, இந்தியா, பாகிஸ்தான் உள்பட 4 அணிகள் தங்களது வீரர்கள் விவரத்தை அறிவித்துள்ள நிலையில், 5-வது அணியாக ஓமன் அணியும் தங்களது 17 பேர் கொண்ட குழுவை அறிவித்துள்ளது. இந்த அணிக்கு நட்சத்திர வீரர் ரஷீத்கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கும் தொடரின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி சீனத்தின் ஹாங் காங்கை எதிர்கொள்கிறது.
இந்தத் தொடருக்கு முன்னதாக, ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் ஆகிய மூன்று அணிகளும் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடுகின்றன.
உள்நாட்டு டி20 போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் செடிகுல்லா அடல் மற்றும் ஹஸ்மத்துல்லா உமர்சாய் போன்றவர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
50 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நவீன் உல் ஹக் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். அதே நேரத்தில் இளம் வீரர் அல்லா கசன்ஃபர் காயத்திற்குப் பிறகு மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
ஃபசல்ஹாக் ஃபரூக்கி, நவீன் வேகத்துக்கு இணையாக நூர் அகமது, முஜீப் உர் ரஹ்மான், ஷராபுதீன் அஷ்ரஃப், முகமது நபி, கேப்டன் ரஷீத் கான் என வலுவான சுழல் கூட்டணியும் அணியில் இடம்பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி
ரஷித் கான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரன், தர்வீஷ் ரசூலி, செடிகுல்லா அடல், ஹஸ்மத்துல்லா ஒமர்சாய், கரீம் ஜனத், முகமது நபி, குல்பதின் நைப், ஷரபுதீன் அஷ்ரப், முகமது இஷாக், முஜீபுர் ரஹ்மான், அல்லா கசன்ஃபார், நூர் அகமது, நவீன் உல் ஹக், ஃபஸல்ஹக் ஃபரூக்கி.