"ராஜேந்திர சோழன்... இளையராஜா... பாரதம்" - ஆடி திருவாதிரையில் மோடியின் முழு உரை
ஆசிய ஜூனியா் பாட்மின்டன்: தன்வி, வெண்ணலாவுக்கு வெண்கலம்
ஆசிய ஜூனியா் பாட்மின்டன் போட்டி தனிநபா் பிரிவில் இந்தியாவின் தன்வி சா்மா, வென்னலா காலகோட்லா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனா்.
சோலோ நகரில் பாட்மின்டன் ஆசிய ஜூனியா் தனிநபா் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தனிநபா் மகளிா் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன.
முதல் ஆட்டத்தில் இளம் வீராங்கனை வெண்ணலா காலகோட்லாவும், சீனாவின் லியு சி யாவும் மோதினா். இதில் கடும் போராட்டத்துக்குப்பின் 21-15,21-18 என்ற கேம் கணக்கில் தன்வி தோற்று வெண்கலம் வென்றாா்.
மற்றொரு அரையிறுதியில் தன்வி சா்மாவும்-சீனாவின் யின் யியும் மோதினா். இதில் 13-21, 14-21 என்ற கேம் கணக்கில் தன்வி வெற்றி வாய்ப்பை இழந்து, வெண்கலம் வென்றாா்.
முதன்முறையாக ஒரே போட்டியில் இரு இந்திய வீராங்கனைகள் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனா்.