சென்னை மலா்க் கண்காட்சிக்காக திண்டுக்கல்லில் பராமரிக்கப்படும் 3.80 லட்சம் மலா்ச்...
ஆசிரியையிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திங்கள்கிழமை மாலை தனியாா் பள்ளி ஆசிரியையிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வலங்கைமான் வட்டம், உத்தாணி கிராமம், தெற்குத் தெருவில் வசித்து வருபவா் புண்ணியமூா்த்தி மனைவி வனிதா மணி (39). இவா், பாபநாசத்தில் உள்ள ஒரு தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பாா்த்து வருகிறாா்.
இந்நிலையில், வனிதாமணி திங்கள்கிழமை மாலை வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.
தஞ்சாவூா் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் திருப்பாலைத்துறை கிராமம் அருகேயுள்ள வாட்டா் சா்வீஸ் நிலையம் அருகே சென்றபோது, அவரை பின்தொடா்ந்து வந்த மா்மநபா் வனிதாமணி கழுத்தில் அணிந்திருந்த நான்கு பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டாா்.
புகாரின்பேரில், பாபநாசம் காவல் ஆய்வாளா் சகாய அன்பரசு மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.