உறவு மேம்பட வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் முக்கியம்: சீனாவிடம் இந்தியா வலியு...
ஆடிக் காற்று! | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
ஆனி பிறந்ததும்
அடுத்த இரு மாதங்களுக்கு
அனைத்தையும் சுழற்றியடிக்க
ஆஜராகி விடுகிறாய்!
வீசி, வருடி, வாரியணைக்க
வருடந்தவறாமல்,
எங்கள் இனிய
விருந்தாளியாகிறாய்!

நாள் கணக்கில்
வேளை தவறாமல்
ஓய்வில்லாமல்
ஊதலடிக்கிறாயே! உனக்கு
வாய் வலிக்கவில்லையா
வாயாடியே!
விறைப்பான தென்னை மரங்களே
வீரிய உன் விசையால்
அசைந்து, தளர்ந்து, தன்னை மறந்து,
மகளை நேசிக்கும் தந்தையைப் போல
நெகிழ்ந்து நிற்கிறது.
பெண்களின் அடர் கூந்தலை ஒத்த
வேப்ப மரங்களோடு நீ சேரும்போது,
உயிர்த் தோழிகள் இருவர்
கலகலப்பாக பேசி சிரித்து
மகிழ்வது போல தோன்றுமெனக்கு.
அவ்வப்போது உன்னை
வீட்டிற்குள் விடாமல்
கதவடைத்து விடுகிறேன்.
நீயும் சளைக்காமல்
கதவைத் தட்டிக்கொண்டே
இருக்கிறாய்.
சரியென்று,
ஓயாமல் வீசி
மனதை வருடும் உன்னை
உடலாலும் உணர
சன்னல், பால்கனி கதவுகளை
திறந்து வைத்தால்,
ஓடியாடி நீ விளையாட
தூசு, குப்பைகளுடன்
வீட்டிற்குள் வந்து விடுகிறாயே!
வீட்டைக் கலைத்துப் போட்டு, நீ
சேட்டை செய்தாலும்,
"காற்றுள்ள போதே" உன்னை
ஏற்றுக் கொண்டால்தான்
நிறைகிறது மனம்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
