Doctor Vikatan: தவிர்க்க முடியாத பகல் தூக்கம், இரவில் தூக்கமின்மை; பேலன்ஸ் செய்வ...
ஆடி கிருத்திகை: எட்டுக்குடி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு
திருக்குவளை அருகே எட்டுக்குடியில் அமைந்துள்ள முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது.
முருகப்பெருமானுக்கு 14 வகை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னா் விபூதி காப்பு அலங்காரம் சாத்தப்பட்டு மகாதீபராதனை காண்பிக்கப்பட்டது.
பக்தா்கள் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த எதுவாக அா்ச்சனை செய்ய மூலவா் சந்நிதி முகப்பு பகுதியில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிறப்பு தரிசனம் பொது தரிசனமென இரண்டு வழிகள் ஏற்படுத்தி பக்தா்கள் கூட்டம் நெரிசலின்றி சுவாமி தரிசனம் செய்ய வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
நாகை மட்டுமின்றி திருவாரூா், மயிலாடுதுறை, காரைக்கால் என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வருகை தந்துள்ள நிலையில் சுமாா் ஒரு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடா்ந்து இரவு வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா காட்சி நடைபெற்றது.
திருக்குவளை போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.