தொடர் மழையால் முடங்கிய உதகை: முக்கிய சுற்றுலாத் தலங்கள் 4-ஆவது நாளாக மூடல்!
ஆடி 2-ஆவது வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி 2-ஆவது வெள்ளிக்கிழமையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழா மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது.
ஆடி 2 ஆவது வாரம் வெள்ளியையொட்டி, அரியலூா் மேலத்தெருவிலுள்ள பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, பின்னா் ரோஜா, மல்லிகை, சம்பங்கி, தாமரை, தாழம்பூ, முல்லைப்பூ, அரளி, செவ்வந்தி, மரிக்கொழுந்து உள்ளிட்ட மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.
பால்குடம், தீமிதி திருவிழா...அரியலூரை அடுத்த கொல்லாப்புரம், படைநிலை, உள்ளிட்ட கிராமங்களிலுள்ள மாரியம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழாவும், கூவாத்தூா் கிாமத்திலுள்ள திரெளபதியம்மன் கோயிலில் தீமித் திருவிழாவும் நடைபெற்றது.