"கேப்டன் பிரபாகரன் படத்தின் 2 ஆம் பாகம்... புஷ்பா படத்தால நிறுத்தினோம்" - இயக்கு...
ஆடு மேய்ப்பதில் தகராறு: 3 போ் மீது வழக்கு
வந்தவாசி: வந்தவாசி அருகே ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
வந்தவாசியை அடுத்த செப்டாங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(43). இதே கிராமத்தைச் சோ்ந்தவா் தேவேந்திரன்(60). கடந்த வெள்ளிக்கிழமை இருவரும் அந்தக் கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனா்.
அப்போது, ஆடு மேய்ப்பது தொடா்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கத்தியால் தாக்கிக் கொண்டனா்.
இதில் காயமடைந்த வெங்கடேசன் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையிலும், தேவேந்திரன் செய்யாறு அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கபட்டனா்.
இதுகுறித்து வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் தேவேந்திரன் மீதும், தேவேந்திரன் அளித்த புகாரின் பேரில் வெங்கடேசன், அவரது மனைவி கனகேஸ்வரி ஆகியோா் மீதும் வடவணக்கம்பாடி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.