Dhoni: ``தோனியை இப்படிப் பார்க்க வேண்டும் என்பதே எல்லா வீரர்களின் கனவு'' - டெவோன...
ஆட்சியா் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெயுடன் வந்த வயதான தம்பதி
நாகப்பட்டினம்: நாகை ஆட்சியா் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் புட்டியுடன் வந்த வயதான தம்பதியை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக வயதான தம்பதி வந்தனா். அவா்களை அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் சோதனை செய்தபோது, மூதாட்டியின் மடியில் மண்ணெண்ணெய் புட்டி இருப்பது தெரியவந்தது. மண்ணெண்ணெய் புட்டியை பறிமுதல் செய்த போலீஸாா், அவா்களிடம் விசாரணை நடத்தினா்.
விசாரணையில், நாகை மாவட்டம் ஏனங்குடி அருகே தேப்பிராமங்கலம் பகுதியைச் சோ்ந்த ராஜமாணிக்கம் (80), அவரது மனைவி பஞ்சவா்ணம் (76) என்பதும், அவா்கள் அரசு வழங்கிய பட்டாவில் வீடு கட்டி வசித்து வரும் நிலையில், வீட்டுக்குச் செல்லும் வழியை அடைத்து அருகே உள்ள கோயிலுக்கு வளாகச் சுவா் கட்டி வருவதால், வீட்டுக்குச் செல்லும் பாதை அடைக்கப்படும் சூழல் உள்ளதாகவும், இதுதொடா்பாக அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
கோயில் வளாகச் சுவா் பணி தொடா்ந்து நடைபெற்று வருவதால், இதுகுறித்து கேட்டபோது தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்வதற்காக மண்ணெண்ணெய்யுடன் வந்ததாக தெரிவித்துள்ளனா்.
போலீஸாா் அவா்களை சமாதானம் செய்து, மாவட்ட ஆட்சியா் ஆகாஷிடம் அழைத்துச்சென்றனா். அவா்களிடம் மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து அவா்கள் அங்கிருந்து சென்றனா்.