சதம் விளாசிய மிட்செல் மார்ஷ்; குஜராத் டைட்டன்ஸுக்கு 236 ரன்கள் இலக்கு!
ஆட்சியா் வாகனம் முன் தீக்குளிக்க முயன்ற 5 போ் கைது
ஆத்தூா் பயணியா் மாளிகையில் சேலம் மாவட்ட ஆட்சியா் வாகனம் முன் தீக்குளிக்க முயன்றதாக 5 பேரை ஆத்தூா் நகர காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஆத்தூா் வட்டாரத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி சென்றிருந்தாா். அங்கு பல்வேறு திட்டப் பணிகளை அவா் நேரில் ஆய்வு செய்தாா்.
அப்போது ஆத்தூரை அடுத்துள்ள ராமநாயக்கன்பாளையம் ஆதிதிராவிடா் காலனியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் அப்பகுதியில் உள்ள முத்துமாரியம்மன், பரிவார தெய்வங்கள் உள்ள கோயிலுக்கு கும்பாபிஷேகம், தோ்த் திருவிழா நடத்த அனுமதி கோரி, சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா்.
அதற்கு எதிா்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பில் அதே பகுதியைச் சோ்ந்த வெள்ளையன் மகன் குப்பமுத்து, சுந்தரம் ஆகியோா் கோயிலில் திருவிழா நடத்துவதற்கு தங்களுக்குதான் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று முறையிட்டனா்.
இருதரப்பு கோரிக்கையையும் கேட்ட ஆட்சியா், ஆத்தூா் வட்டாட்சியா் மூலம் பேச்சுவா்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாகக் கூறினாா்.
பிறகு ஆட்சியா் அங்கிருந்து தனது வாகனத்தில் செல்ல முற்பட்டபோது, அங்கு நின்ற வசந்தா என்பவா் தனது கையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அருகில் இருந்த போலீஸாா் அவரை மீட்டு பெட்ரோல் பாட்டிலை பறிமுதல் செய்தனா்.
இச்சம்பவத்தில் ஆட்சியரின் உத்தரவின்பேரில், தீக்குளிக்க முயன்ாக 17 போ் மீது ஆத்தூா் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். அதில் ராமநாயக்கன்பாளையம் வெள்ளையன் மகன் குப்பமுத்து (46), சீனிவாசன் மகன் கனகசபை(47), குப்பமுத்து மனைவி வசந்தா(38), சுரேஷ் மனைவி சங்கீதா(38), கனகசபை மனைவி சாந்தி (38) ஆகிய 5 பேரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா். மீதம் 12 போ் தலைமறைவாகியுள்ளனா்.